• Apr 18 2024

ஜே.வி.பி உறுப்பினர்களின் அறிவு கிணற்று தவளை போன்றது – திஸ்ஸ அத்தநாயக்க விமர்சனம் SamugamMedia

Chithra / Mar 19th 2023, 11:20 am
image

Advertisement

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களின் அறிவு என்பது கிணற்றில் உள்ள தவளை கூட்டத்தைப் போன்றது என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பனர் திஸ்ஸ அத்தநாயக்க விமர்சனம் செய்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்த கருத்துக்கே இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றால், இலங்கை மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்று சுனில் ஹந்துன்நெத்தி கூறியதைக் குறிப்பிட்ட திஸ்ஸ அத்தநாயக்க, 

இந்த நேரத்தில் ரூபாயின் பெறுமதி மிகவும் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும் ரூபாவை பலப்படுத்த வேண்டும் என கூறி நாடாளுமன்றத்தில் பலவந்தமாக தீர்மானங்களை நிறைவேற்றி அதனை பலப்படுத்த முடியாது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

ரூபாவின் பெறுமதியை உயர்த்துவதற்கு பொருளாதாரத்தில் அதற்கான 04 வழிமுறைகள் உள்ளதாக தெரிவித்த அவர் ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், வெளிநாட்டுப் பணத்தை அனுப்புதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் நாட்டிற்கு பணம் புழங்கும் வேலைத்திட்டம் தயாரித்தல் என்றும் குறிப்பிட்டார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சுவர் வேலைத்திட்டத்துடன் இணைந்து நேற்றையதினம் கெக்கிராவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஜே.வி.பி உறுப்பினர்களின் அறிவு கிணற்று தவளை போன்றது – திஸ்ஸ அத்தநாயக்க விமர்சனம் SamugamMedia மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களின் அறிவு என்பது கிணற்றில் உள்ள தவளை கூட்டத்தைப் போன்றது என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பனர் திஸ்ஸ அத்தநாயக்க விமர்சனம் செய்துள்ளார்.மக்கள் விடுதலை முன்னணின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்த கருத்துக்கே இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றால், இலங்கை மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்று சுனில் ஹந்துன்நெத்தி கூறியதைக் குறிப்பிட்ட திஸ்ஸ அத்தநாயக்க, இந்த நேரத்தில் ரூபாயின் பெறுமதி மிகவும் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.எவ்வாறாயினும் ரூபாவை பலப்படுத்த வேண்டும் என கூறி நாடாளுமன்றத்தில் பலவந்தமாக தீர்மானங்களை நிறைவேற்றி அதனை பலப்படுத்த முடியாது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டிருந்தார்.ரூபாவின் பெறுமதியை உயர்த்துவதற்கு பொருளாதாரத்தில் அதற்கான 04 வழிமுறைகள் உள்ளதாக தெரிவித்த அவர் ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், வெளிநாட்டுப் பணத்தை அனுப்புதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் நாட்டிற்கு பணம் புழங்கும் வேலைத்திட்டம் தயாரித்தல் என்றும் குறிப்பிட்டார்.ஜக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சுவர் வேலைத்திட்டத்துடன் இணைந்து நேற்றையதினம் கெக்கிராவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement