கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெண்!

104

நாட்டின் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் அன்றாட ஜீவனோபாய தொழிலை மாத்திரம் நம்பி வாழும் பல்வேறு குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் காணப்பட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அன்றாட தொழிலாளர்கள் முதல் அரச உத்தியோகத்தர்கள் சகிதம் தங்களது வாழ்க்கையை திறம்பட நடாத்த முடியாத சூழ்நிலையில் காணப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவு, மூன்றாம் வட்டாரத்தில் ஹுஸைனியா வீதியில் வசிக்கும் 46 வயதுடைய அமீர்அலி சித்தி சுகைரா என்பவர் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைப்பணிப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றார்.

இவருக்கு, இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ள நிலையில் தனது கணவரின் வருமானம் போதாமை காரணமாக சுமார் பத்து வருடங்களாக களிமண் மூலம் உற்பத்தி பொருட்களும், மூன்று வருடங்களாக சிரட்டை மூலம் பொருட்களையும், நூல் மூலம் தொட்டில் போன்ற உற்பத்திகளை செய்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விற்பனை செய்து வருகின்றார்.

நாட்டின் தற்போதைய நிலையில், கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுவதோடு, இப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக உபகரணம் இன்மையால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றார்.

மேலும், அவரது கைப்பணியை திறம்பட மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி உற்பத்தி செய்வதற்காக உபகரணங்களை வழங்கி, உற்பத்தியை மேம்படுத்த உதவுமாறும், என்னால் சுயதொழில் தொழில் செய்ய ஆர்வமாக உள்ள பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத் திட்டத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்வதற்கும், இவர் மூலம் பல பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பயிற்சி வழங்கவும், அரச அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: