• Mar 29 2024

எமனுக்கு இடியப்பம் கொடுத்து உலக சாதனை படைத்த நாய்..!samugammedia

Sharmi / May 13th 2023, 1:20 pm
image

Advertisement

நேற்றைய தினம் 31 வது பிறந்த தினத்தை கொண்டாடிய பாபி உலகின் வயதான நாய் என்ற  கின்னஸ் சாதனையை  படைத்துள்ளது.



கால்நடைகள் மற்றும்  ஓநாய்களிடமிருந்து பாதுகாப்பதற்காக வளர்க்கப்படும் ரஃபெய்ரோ அலண்டெஜோ  இனத்தை சேர்ந்த இந்த நாய் போர்சுகலின் லெய்ரா மாவட்டத்தில் வசித்து வருகின்றது.

32 வயதான போதும் பாபி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதனை பராமரித்துவரும் லியோனல் கோஸ்டா தெரிவித்துள்ளார்.

ஒரு தூய இனமான  ரஃபெய்ரோ, ஒரு போர்ச்சுகீசிய கால்நடை பாதுகாப்பு நாய், அதன் சாதாரண ஆயுட்காலம் 12 மற்றும் 14 ற்கு இடையிலே காணப்படுகின்றது.

பாபி  மே 11, 1992 இல், மத்திய போர்ச்சுகலில் உள்ள சிறிய கிராமமான கான்குயிரோஸில் கோஸ்டா குடும்பத்திற்கு சொந்தமான ஒரு மர சேமிப்புக் கொட்டகையில் மூன்று குட்டிகளுடன் பிறந்துள்ளது.



குடும்பத்தில் பல விலங்குகள் இருப்பதால், பிறந்த நாய்க்குட்டிகளை வைத்திருக்க முடியாது என்று லியோனலின் தந்தை முடிவு செய்த வேளை பாபியை  லியோனலும்  அவரது சகோதர்களும் கண் திறக்கும் வரை ரகசியமாக வளர்த்துள்ளனர்.

பின்னர் அவர்களது குடும்பத்தில் பாபியும் ஒரு உறுப்பினர் ஆகி விட்டது.

தான் ஒரு உலக சாதனை படைத்தவர் என்பதை மறந்து இன்று பாபி தனது அந்தி வருடங்களை வாழ்வாழ்வதாகவும், "இந்த எதிர்வினையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்றும் பாபியின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் நாட்டுப்புற வாழ்க்கையின் அமைதி மற்றும் அவரது மனித உணவுகளான இறைச்சி மற்றும் மீன்கள் வகைகள் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் பாபியை ஒரு போதும் சங்கிலியால் பிணைக்கவில்லை என்றும் அல்லது ஒரு கட்டையை அணிந்து கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளில் சுற்றித் திரிய விட்டதில்லை என்றும் லியோனல் குறிப்பிட்டுள்ளார்.



அத்தோடு, பாபியால் அதிகம் நடக்க முடியாது என்பதால்,  பெரும்பாலான நேரத்தை பூனைகளுடன் முற்றத்தில் சுற்றித் திரிவதாகவும் அல்லது உணவுக்கு பின்னர் உறங்குவதாகவும் அதன் பராமரிப்பாளர் லியோனல் தெரிவித்துள்ளார்.

எமனுக்கு இடியப்பம் கொடுத்து உலக சாதனை படைத்த நாய்.samugammedia நேற்றைய தினம் 31 வது பிறந்த தினத்தை கொண்டாடிய பாபி உலகின் வயதான நாய் என்ற  கின்னஸ் சாதனையை  படைத்துள்ளது. கால்நடைகள் மற்றும்  ஓநாய்களிடமிருந்து பாதுகாப்பதற்காக வளர்க்கப்படும் ரஃபெய்ரோ அலண்டெஜோ  இனத்தை சேர்ந்த இந்த நாய் போர்சுகலின் லெய்ரா மாவட்டத்தில் வசித்து வருகின்றது.32 வயதான போதும் பாபி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதனை பராமரித்துவரும் லியோனல் கோஸ்டா தெரிவித்துள்ளார்.ஒரு தூய இனமான  ரஃபெய்ரோ, ஒரு போர்ச்சுகீசிய கால்நடை பாதுகாப்பு நாய், அதன் சாதாரண ஆயுட்காலம் 12 மற்றும் 14 ற்கு இடையிலே காணப்படுகின்றது. பாபி  மே 11, 1992 இல், மத்திய போர்ச்சுகலில் உள்ள சிறிய கிராமமான கான்குயிரோஸில் கோஸ்டா குடும்பத்திற்கு சொந்தமான ஒரு மர சேமிப்புக் கொட்டகையில் மூன்று குட்டிகளுடன் பிறந்துள்ளது. குடும்பத்தில் பல விலங்குகள் இருப்பதால், பிறந்த நாய்க்குட்டிகளை வைத்திருக்க முடியாது என்று லியோனலின் தந்தை முடிவு செய்த வேளை பாபியை  லியோனலும்  அவரது சகோதர்களும் கண் திறக்கும் வரை ரகசியமாக வளர்த்துள்ளனர். பின்னர் அவர்களது குடும்பத்தில் பாபியும் ஒரு உறுப்பினர் ஆகி விட்டது. தான் ஒரு உலக சாதனை படைத்தவர் என்பதை மறந்து இன்று பாபி தனது அந்தி வருடங்களை வாழ்வாழ்வதாகவும், "இந்த எதிர்வினையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்றும் பாபியின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் நாட்டுப்புற வாழ்க்கையின் அமைதி மற்றும் அவரது மனித உணவுகளான இறைச்சி மற்றும் மீன்கள் வகைகள் என்றும் கூறியுள்ளார். அத்துடன் பாபியை ஒரு போதும் சங்கிலியால் பிணைக்கவில்லை என்றும் அல்லது ஒரு கட்டையை அணிந்து கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளில் சுற்றித் திரிய விட்டதில்லை என்றும் லியோனல் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, பாபியால் அதிகம் நடக்க முடியாது என்பதால்,  பெரும்பாலான நேரத்தை பூனைகளுடன் முற்றத்தில் சுற்றித் திரிவதாகவும் அல்லது உணவுக்கு பின்னர் உறங்குவதாகவும் அதன் பராமரிப்பாளர் லியோனல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement