• Mar 29 2024

யாழில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை-பெண்ணொருவர் ஆதங்கம்!

Sharmi / Jan 6th 2023, 12:41 pm
image

Advertisement

யாழில் தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு  காரணம் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையே என்றும் இதனை தடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் நாவற்குழியில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணையுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கணவன் மனைவி பிரிந்து இருக்கின்ற சூழ்நிலையில் பெண் பிள்ளைகள் ,குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இவர்களை வயது வந்த முதியவர்கள்,வாலிபர்கள் போன்றோர்  வசப்படுத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள்.

பொலிஸ் நிலையத்திற்கு சொன்னால் அவர்களை கைது செய்து இரண்டு மூன்று வருடங்களில் விடுதலை செய்கிறார்கள்.இவ்வாறு தொடர்ந்து நடக்கிறது இதற்கு ஒரு தீர்வோ ,நடவடிக்கையோ எவரும் எடுப்பதாக இல்லை.கணவன் இல்லாத குடும்ப பெண்கள் தங்களது பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

வேலைக்குச் சென்றாலும் வீட்டில்  பிள்ளைகளை தனியாக விட்டு  வந்திருக்கின்றோமே  என்ற ஏக்கத்தில் இருக்க வேண்டி உள்ளது.பெண்பிள்ளைகளுக்கு இப்பொழுது பாதுகாப்பு மிகக் குறைவு.போதைப் பொருட்களை உட்கொண்டு விட்டு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறான போதைப்பொருள் பழக்கத்தினால் ஆண் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கின்றது. பாடசாலைக்குச் சென்று படிப்பதில்லை.எனவே இதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

யாழில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை-பெண்ணொருவர் ஆதங்கம் யாழில் தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு  காரணம் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையே என்றும் இதனை தடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ் நாவற்குழியில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணையுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.கணவன் மனைவி பிரிந்து இருக்கின்ற சூழ்நிலையில் பெண் பிள்ளைகள் ,குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இவர்களை வயது வந்த முதியவர்கள்,வாலிபர்கள் போன்றோர்  வசப்படுத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள்.பொலிஸ் நிலையத்திற்கு சொன்னால் அவர்களை கைது செய்து இரண்டு மூன்று வருடங்களில் விடுதலை செய்கிறார்கள்.இவ்வாறு தொடர்ந்து நடக்கிறது இதற்கு ஒரு தீர்வோ ,நடவடிக்கையோ எவரும் எடுப்பதாக இல்லை.கணவன் இல்லாத குடும்ப பெண்கள் தங்களது பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.வேலைக்குச் சென்றாலும் வீட்டில்  பிள்ளைகளை தனியாக விட்டு  வந்திருக்கின்றோமே  என்ற ஏக்கத்தில் இருக்க வேண்டி உள்ளது.பெண்பிள்ளைகளுக்கு இப்பொழுது பாதுகாப்பு மிகக் குறைவு.போதைப் பொருட்களை உட்கொண்டு விட்டு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறான போதைப்பொருள் பழக்கத்தினால் ஆண் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கின்றது. பாடசாலைக்குச் சென்று படிப்பதில்லை.எனவே இதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement