உண்மைச் சம்பவங்களை உணர்வுடன் எடுத்துச் சொல்லும் “இவர்கள் இப்ப” குறும்படம்!

527

ஒரு சமூகத்தை உள்ளபடியே பிரதிபலித்துக் காட்டக்கூடிய சினிமா நம் நாட்டு கலைஞர்களின் கைவந்த கலை.
இவ்வாறான நம் நாட்டு கலைஞர்களின் முயற்சியில் வெளியாகியிருக்கிறது “இவர்கள் இப்ப” என்ற குறும்படம்.

கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது. அதுவும் இலங்கை போன்ற வளர்முக நாடுகளை பொருளாதார ரீதியாக பதம் பார்த்து விட்டது.

அன்றாடம் உழைத்து உண்ண வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள் ஊரடங்கு, பயணத்தடை போன்றவற்றால் வேலை இழந்து கொடிய வறுமைக்குள் சிக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையை பெரும்பாலானோர் அனுபவித்தாலும் கூட சிலர் இது பற்றி அறியாமல் உள்ளனர்.

ஒரு சிலர் சாப்பிட வழியில்லாமல் இருக்கின்ற அதேநேரம் ஒரு சிலருக்கு மிதமிஞ்சிய உதவிகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையை எடுத்துக் காட்டியிருக்கிறது இந்த ‘இவர்கள் இப்ப’ என்ற குறும்படம்

இன்றைய சூழ்நிலையை கண் முன் கொண்டு வரும் இந்த குறும்படத்தின் படத்தொகுப்பை செய்துள்ளார் . ச .க.ரமணா,
கதை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் அ. யசிதரன். கதைக்கு உயிரோட்டம் அளித்து நடித்துள்ளார்கள் ஆனந்தன்,மயூரன், விமல்,றூபன்,வசந்தன்,சாரோன்,யுவானிஸ், சங்கீதா,பேபி அம்மா ஆகியோர்.

இந்த குறும்படம் பற்றி பேசிய இயக்குனர் “இது கொரோனா ஆரம்பத்தில் நம் நாட்டில் நடந்த சில உண்மை சம்பவங்களை சமூகத்திற்கு காட்டவேண்டுமென்று எடுத்த குறும்படம். இந்த நேரத்தில் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் பகுதியளவு பணியுடன் வெளியிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவர்கள் இப்ப குறும்படத்தை ஓரங்கம் யூடியூப் சேனலில் பார்வையிட முடியும்.

.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: