• Dec 01 2022

இவ்வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள பிரபல நடிகர் இவர்தான்!

Sharmi / 6 days ago
image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில் அவரின் உடல் நிலை தொடர்பில் அறிக்கை வெளியிட்ட வைத்தியசாலை தரப்பு "நடிகர் கமல்ஹாசன் லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் விரைவில் வீடு திரும்புவார்" எனவும் குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில் இந்தவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகின்றது.

இதனையடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக முக்கிய நடிகர் ஒருவரை தொகுப்பாளராக கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்தவாரம் கம்ல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவாரா? அல்லது வேறொருவர் தொகுத்து வழங்குவாரா என்பது தொடர்பில் பிக்பாஸ் குழுவினர் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.