• Apr 24 2024

பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வர காரணம் இதுதான்! காலையில் இதை உண்பதால் என்ன நடக்கும்?

Chithra / Dec 28th 2022, 3:30 pm
image

Advertisement

காலை உணவாக பலரும் சாப்பிடுவது பொங்கல் என கூறினால் அது மிகையாகாது..! இதில் கலோரிகள் அதிகமாகவும், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாகவும் உள்ளது.

அவ்வப்போது பொங்கலை காலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சரி பொங்கல் சாப்பிட்டால் உடனே தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதாக பலரும் சொல்வார்கள்.

பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வர காரணம் என்ன?

எண்ணெய், டால்டா, நெய் போன்றவை அதிகமாக சேர்த்து சமைக்கப்பட்ட எந்த உணவு வகையாக இருந்தாலும் சாப்பிட்ட உடனே தூக்க உணர்வு ஏற்படுவது இயல்புதான். 

அது பொங்கலுக்கு மட்டுமே உண்டான குணம் இல்லை. இந்த உணவு வகைகள் செரிப்பதற்கும் நிறைய நேரம் தேவைப்படும்.


முக்கியமாக இந்த உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக அளவு ஆக்ஸிஜனும் வேண்டும். இதனால், மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் அளவு குறைந்து வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்.

எனவே, மூளையைத் தூண்டுகிற சக்தி குறைந்து அதனுடைய செயல்பாடுகள் மந்தமாக நடைபெறத் தொடங்கும்.

இதுமாதிரியான நேரங்களில்தான் அதிக களைப்பாக இருப்பது போலவும், தூங்கினால் நன்றாக இருக்கும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. உண்ட மயக்கம் என்று சொல்வதும் இதைத்தான். 

பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வர காரணம் இதுதான் காலையில் இதை உண்பதால் என்ன நடக்கும் காலை உணவாக பலரும் சாப்பிடுவது பொங்கல் என கூறினால் அது மிகையாகாது. இதில் கலோரிகள் அதிகமாகவும், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாகவும் உள்ளது.அவ்வப்போது பொங்கலை காலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.சரி பொங்கல் சாப்பிட்டால் உடனே தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதாக பலரும் சொல்வார்கள்.பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வர காரணம் என்னஎண்ணெய், டால்டா, நெய் போன்றவை அதிகமாக சேர்த்து சமைக்கப்பட்ட எந்த உணவு வகையாக இருந்தாலும் சாப்பிட்ட உடனே தூக்க உணர்வு ஏற்படுவது இயல்புதான். அது பொங்கலுக்கு மட்டுமே உண்டான குணம் இல்லை. இந்த உணவு வகைகள் செரிப்பதற்கும் நிறைய நேரம் தேவைப்படும்.முக்கியமாக இந்த உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக அளவு ஆக்ஸிஜனும் வேண்டும். இதனால், மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் அளவு குறைந்து வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்.எனவே, மூளையைத் தூண்டுகிற சக்தி குறைந்து அதனுடைய செயல்பாடுகள் மந்தமாக நடைபெறத் தொடங்கும்.இதுமாதிரியான நேரங்களில்தான் அதிக களைப்பாக இருப்பது போலவும், தூங்கினால் நன்றாக இருக்கும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. உண்ட மயக்கம் என்று சொல்வதும் இதைத்தான். 

Advertisement

Advertisement

Advertisement