• Sep 30 2024

சுற்றுலாத்துறையுடன், தொடர்புடையவர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுக்க குரல் கொடுக்கவேண்டும் - வஜிர அபேவர்தன! SamugamMedia

Tamil nila / Mar 1st 2023, 4:14 pm
image

Advertisement

சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில்துறை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை தடுப்பதற்கு குரல் கொடுக்கவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.


கடந்த சில தினங்களாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுவதாக வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.


எனவே இதனால் நாட்டுக்கு வருகை தருகின்ற உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிட்டள்ளார்.


அதனைக் கருதிற்கொண்டு சுற்றுலாத்துறை ஹோட்டல்களை நடத்தும் அதன் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்களை மேற்கொண்டு வருவோர் இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டியது அவசியமென்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.


பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களை விமர்சனம் செய்வோர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வேறு மாற்றுவழி இருக்குமானால் சமர்ப்பிக்கமுடியும் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


எந்தவொரு முறையான திட்டமும் இல்லாமல் எதிர்காலத்திற்கான எந்த தூரதரிசனமுமின்றி குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டையும் மக்களையும் அழிவுக்குள்ளாக்குவோர் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியமென்றும் அவர் எச்சரித்துள்ளார்.


சுற்றுலாத்துறையுடன், தொடர்புடையவர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுக்க குரல் கொடுக்கவேண்டும் - வஜிர அபேவர்தன SamugamMedia சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில்துறை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை தடுப்பதற்கு குரல் கொடுக்கவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.கடந்த சில தினங்களாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுவதாக வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.எனவே இதனால் நாட்டுக்கு வருகை தருகின்ற உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிட்டள்ளார்.அதனைக் கருதிற்கொண்டு சுற்றுலாத்துறை ஹோட்டல்களை நடத்தும் அதன் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்களை மேற்கொண்டு வருவோர் இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டியது அவசியமென்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களை விமர்சனம் செய்வோர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வேறு மாற்றுவழி இருக்குமானால் சமர்ப்பிக்கமுடியும் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.எந்தவொரு முறையான திட்டமும் இல்லாமல் எதிர்காலத்திற்கான எந்த தூரதரிசனமுமின்றி குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டையும் மக்களையும் அழிவுக்குள்ளாக்குவோர் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியமென்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement