• Mar 29 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்தவர்கள் இருக்க வேண்டியது அங்கொடையில்- ஸ்ரீகாந்தா சீற்றம்!

Sharmi / Jan 30th 2023, 3:59 pm
image

Advertisement

2020 பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பாக போட்டியிட்ட பொழுது தமிழ் தேசிய வாக்குகள் 3 அணியாக உடைந்தது. அதன் விளைவாக சிங்கள கட்சிகளின் முகவர்கள் சில ஆசனங்களினை பெற்றனர். 2018ல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாங்கள் கூட்டமைப்பாக பல மேடைகளில் பிரச்சாரம் செய்தும் கூட பல இடங்களில் தொங்கு சபையாக அமைந்தன. இவ்வாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்தும் கூட ஆட்சியினை சில சபைகளில் அமைக்க முடியாமையினை உணர்ந்தவர்கள் இன்று தனியாக சென்றதால் இவர்கள் இருக்க வேண்டியது தமிழ் தேசத்திலன்று சிங்கள தேச அங்கொடை மன நோய் வைத்தியசாலையில் இருக்க வேண்டியவர்கள்.  என ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழரசு கட்சியினுடைய பிரதம பூசாரியர், பிரதம குருவாக  தன்னை தானே நியமனம் செய்த சட்டத்தரணி தம் சுருதியை மாற்றியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு என அவர் பேச ஆரம்பித்துள்ளனர். அது உண்மையான மனமாற்றம் எனில் அவர்கள் வர வேண்டியது எம்மிடம். தமிழினத்தினதும் அரசியலினதும் ஒற்றுமையினை குழைத்தமையினையும்,   தமிழரசு கட்சியினை உடைத்தமையினையும், தம் கட்சியின் செல்வாக்கு சரிந்தமையினையும் புரிந்து கொண்டவர்கள் மக்களை ஏமாற்றவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வாசகத்தை பயன்படுத்துகின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு, சம்பந்தனுக்கோ அல்லது அதனை அந்த அணியை நாசமாக்குவதற்கு அந்த அணியில் இருக்கும் தம்பி சுமந்திரனுக்கோ, அவர்களோடு இருக்கும் ஏனைய தலைவர்களிற்கோ கூட்டமைப்பு என்று உச்சரிக்க தகுதி ஏதும் கிடையாது. நாம் அனைவரும் பிரிந்து கேட்டால் விகிதாசார முறையில் ஆசனம் கிடைக்கும் என பச்சை பொய்யினை கூச்சமின்றி மக்களிற்கு கக்கி மக்களை ஏமாற்ற நினைக்கும் தமிழரசு கட்சி தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து முறையான பாடத்தை பெற நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

2020 தேர்தலிலே கூட்டமைப்பாக போட்டியிட்ட பொழுது தமிழ் தேசிய வாக்குகள் 3 அணியாக உடைந்தது. அதன் விளைவாக சிங்கள கட்சிகளின் முகவர்கள் சில ஆசனங்களினை பெற்றனர். இவ்வாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்தும் கூட ஆட்சியினை சில சபைகளில் அமைக்க முடியாமையினை உணர்ந்தவர்கள் இன்று தனியாக சென்றதால் இவர்கள் இருக்க வேண்டியது தமிழ் தேசத்திலன்று சிங்கள தேச அங்கொடையிலே இருக்க வேண்டியவர்கள்.

 ஸ்ரீலங்கா அரசு நடந்து முடிந்த யுத்தத்தில் 2009 மே மாதம்  முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் பொழுது ஸ்ரீலங்கா அரசு நிகழ்த்திய பாரிய யுத்த கொடுமைகள் தொடர்பிலே  ஐக்கிய நாடுகள்  சபை, மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில்  குரலெழும்பி இலங்கை அரசை சர்வதேசத்தில் தனிப்படுத்தும் நிலை ஏற்பட்ட பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தானாக முன்வந்து அவ் விவகாரங்களினை கையாள துணிந்த தம்பி சுமந்திரன் எந்தளவு அடக்கி வாசிக்கின்றார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

இந்திய அரசை அசைக்க வேண்டிய நிலைமையிலும் சம்பந்தன் சென்னையில் டீ.வி பார்த்து கொண்டிருந்தார். அவரை சந்திக்க கஷ்ரப்பட்டோம். மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கொடுத்த மாளிகையினை எந்த வித அரசியல் அந்தஸ்தும் இல்லாமல் இப்பொழும் தன்னுடைய தனிப்பட்ட இல்லமாக பயன்படுத்தும் சம்பந்தனை சுமந்தோம். ஏனெனில் ஒற்றுமை என்ற பெயரில், பரஸ்பர குற்றச்சாட்டுகளினை மறந்து, தமிழின நலனுக்காகவே இவ் ஒற்றுமை கட்டிக்காக்கப்பட்டது.

பிரித்தாள வேண்டும் என பிரித்தானியர்கள் கையாண்டதை சிங்கள தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளார். நாம் ஒன்றாக இணையும் ஒவ்வொரு தடவையும் அதனை குழப்ப முடியுமா என சிங்கள அரசு திட்டம் போடுகின்றது. உடைக்க முடியாத அரணாக 6 கட்சிகளும் எழும்பிய தருவாயில் தமிழரசு கட்சி பிரிந்து சென்றுள்ளது. தம் சிங்கள அரசியல் நண்பர்களை குஷிப்படுத்துவதற்காகவும் நாம் அடக்கி வாசிக்கின்றோம் என்று  காட்டவும் இந்த துரோகத்தை செய்துள்ளனர்.

இந்த தேர்தல்  வடக்கு கிழக்கு முழுவதிலும் தமிழ் மக்கள் மத்தியிலே  முன்னெடுக்கப்படுகின்ற பொதுஜன  வாக்கெடுப்பு. இதனுடைய தீர்ப்பினை நாம் அனைவரும் பார்ப்பதினை  காட்டிலும் இலங்கை பிரைச்சினையில் அக்கறையுடைய இந்தியா,அமெரிக்கா ,இங்கிலாந்துட்பட ஐரோப்பிய நாடுகள் கவனிக்கின்றன. ஐரோப்பிய தூதுவர்கள் அடிக்கடி வந்து செல்லுகின்றனர். சீன தூதுவர் ஏன் வருகின்றார் என்பதை நாம் அறிவோம். உலகத்தின் கவனம் எம் பக்கம் திரும்பி  இருக்கும் சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுமந்திரன், சம்மந்தன் போன்ற துரோகிகளிற்கு வரலாற்றில் முதுகில் குத்தியவர்கள் என்ற  மகுடமே சூட்ட வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தினை வெளிக்காட்டியிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்தவர்கள் இருக்க வேண்டியது அங்கொடையில்- ஸ்ரீகாந்தா சீற்றம் 2020 பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பாக போட்டியிட்ட பொழுது தமிழ் தேசிய வாக்குகள் 3 அணியாக உடைந்தது. அதன் விளைவாக சிங்கள கட்சிகளின் முகவர்கள் சில ஆசனங்களினை பெற்றனர். 2018ல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாங்கள் கூட்டமைப்பாக பல மேடைகளில் பிரச்சாரம் செய்தும் கூட பல இடங்களில் தொங்கு சபையாக அமைந்தன. இவ்வாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்தும் கூட ஆட்சியினை சில சபைகளில் அமைக்க முடியாமையினை உணர்ந்தவர்கள் இன்று தனியாக சென்றதால் இவர்கள் இருக்க வேண்டியது தமிழ் தேசத்திலன்று சிங்கள தேச அங்கொடை மன நோய் வைத்தியசாலையில் இருக்க வேண்டியவர்கள்.  என ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரியில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழரசு கட்சியினுடைய பிரதம பூசாரியர், பிரதம குருவாக  தன்னை தானே நியமனம் செய்த சட்டத்தரணி தம் சுருதியை மாற்றியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு என அவர் பேச ஆரம்பித்துள்ளனர். அது உண்மையான மனமாற்றம் எனில் அவர்கள் வர வேண்டியது எம்மிடம். தமிழினத்தினதும் அரசியலினதும் ஒற்றுமையினை குழைத்தமையினையும்,   தமிழரசு கட்சியினை உடைத்தமையினையும், தம் கட்சியின் செல்வாக்கு சரிந்தமையினையும் புரிந்து கொண்டவர்கள் மக்களை ஏமாற்றவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வாசகத்தை பயன்படுத்துகின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.அத்தோடு, சம்பந்தனுக்கோ அல்லது அதனை அந்த அணியை நாசமாக்குவதற்கு அந்த அணியில் இருக்கும் தம்பி சுமந்திரனுக்கோ, அவர்களோடு இருக்கும் ஏனைய தலைவர்களிற்கோ கூட்டமைப்பு என்று உச்சரிக்க தகுதி ஏதும் கிடையாது. நாம் அனைவரும் பிரிந்து கேட்டால் விகிதாசார முறையில் ஆசனம் கிடைக்கும் என பச்சை பொய்யினை கூச்சமின்றி மக்களிற்கு கக்கி மக்களை ஏமாற்ற நினைக்கும் தமிழரசு கட்சி தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து முறையான பாடத்தை பெற நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும். 2020 தேர்தலிலே கூட்டமைப்பாக போட்டியிட்ட பொழுது தமிழ் தேசிய வாக்குகள் 3 அணியாக உடைந்தது. அதன் விளைவாக சிங்கள கட்சிகளின் முகவர்கள் சில ஆசனங்களினை பெற்றனர். இவ்வாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்தும் கூட ஆட்சியினை சில சபைகளில் அமைக்க முடியாமையினை உணர்ந்தவர்கள் இன்று தனியாக சென்றதால் இவர்கள் இருக்க வேண்டியது தமிழ் தேசத்திலன்று சிங்கள தேச அங்கொடையிலே இருக்க வேண்டியவர்கள்.  ஸ்ரீலங்கா அரசு நடந்து முடிந்த யுத்தத்தில் 2009 மே மாதம்  முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் பொழுது ஸ்ரீலங்கா அரசு நிகழ்த்திய பாரிய யுத்த கொடுமைகள் தொடர்பிலே  ஐக்கிய நாடுகள்  சபை, மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில்  குரலெழும்பி இலங்கை அரசை சர்வதேசத்தில் தனிப்படுத்தும் நிலை ஏற்பட்ட பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தானாக முன்வந்து அவ் விவகாரங்களினை கையாள துணிந்த தம்பி சுமந்திரன் எந்தளவு அடக்கி வாசிக்கின்றார் என்பது அனைவர்க்கும் தெரியும். இந்திய அரசை அசைக்க வேண்டிய நிலைமையிலும் சம்பந்தன் சென்னையில் டீ.வி பார்த்து கொண்டிருந்தார். அவரை சந்திக்க கஷ்ரப்பட்டோம். மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கொடுத்த மாளிகையினை எந்த வித அரசியல் அந்தஸ்தும் இல்லாமல் இப்பொழும் தன்னுடைய தனிப்பட்ட இல்லமாக பயன்படுத்தும் சம்பந்தனை சுமந்தோம். ஏனெனில் ஒற்றுமை என்ற பெயரில், பரஸ்பர குற்றச்சாட்டுகளினை மறந்து, தமிழின நலனுக்காகவே இவ் ஒற்றுமை கட்டிக்காக்கப்பட்டது. பிரித்தாள வேண்டும் என பிரித்தானியர்கள் கையாண்டதை சிங்கள தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளார். நாம் ஒன்றாக இணையும் ஒவ்வொரு தடவையும் அதனை குழப்ப முடியுமா என சிங்கள அரசு திட்டம் போடுகின்றது. உடைக்க முடியாத அரணாக 6 கட்சிகளும் எழும்பிய தருவாயில் தமிழரசு கட்சி பிரிந்து சென்றுள்ளது. தம் சிங்கள அரசியல் நண்பர்களை குஷிப்படுத்துவதற்காகவும் நாம் அடக்கி வாசிக்கின்றோம் என்று  காட்டவும் இந்த துரோகத்தை செய்துள்ளனர். இந்த தேர்தல்  வடக்கு கிழக்கு முழுவதிலும் தமிழ் மக்கள் மத்தியிலே  முன்னெடுக்கப்படுகின்ற பொதுஜன  வாக்கெடுப்பு. இதனுடைய தீர்ப்பினை நாம் அனைவரும் பார்ப்பதினை  காட்டிலும் இலங்கை பிரைச்சினையில் அக்கறையுடைய இந்தியா,அமெரிக்கா ,இங்கிலாந்துட்பட ஐரோப்பிய நாடுகள் கவனிக்கின்றன. ஐரோப்பிய தூதுவர்கள் அடிக்கடி வந்து செல்லுகின்றனர். சீன தூதுவர் ஏன் வருகின்றார் என்பதை நாம் அறிவோம். உலகத்தின் கவனம் எம் பக்கம் திரும்பி  இருக்கும் சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுமந்திரன், சம்மந்தன் போன்ற துரோகிகளிற்கு வரலாற்றில் முதுகில் குத்தியவர்கள் என்ற  மகுடமே சூட்ட வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தினை வெளிக்காட்டியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement