• Apr 23 2024

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தயாராகிறார் திலகர்!

crownson / Dec 29th 2022, 10:15 am
image

Advertisement

2023 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நுவரெலியா மாவட்ட இளைஞர்,யுவதிகள் பொது அமைப்புகள், தோழமைக் கட்சிகள் உடனான ஆரம்ப கலந்துரையாடல் ஒன்றை மலையக அரசியல் அரங்கம் 30-12-2022 அன்று காலை 9:30 முதல் மாலை 4:30 வரை ஹட்டன் கிவி ஹோட்டலில்  ஒழுங்கு செய்துள்ளது.

அரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியர்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வின் நெறிப்படுத்தலில், செயலாளர் நா. கிருஷ்ணகுமார் சந்திப்பைச் செயற்படுத்துவார்.

மகளிர் இணைப்பாளர்களாக மகளிர் அணியின் ரஷீதா - டிலானி ஆகியோர் செயற்படவுள்ளதுடன் சந்திப்பு ஒழுங்கமைப்புப் பணிகளை தேசிய அமைப்பாளர் பி. கே.ரவி மேற்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு அவசியாமான ஆலோசனைகளை வழங்குவதுடன் மாதிரி விண்ணப்பங்களும் விநியோகிக்கப்படவுள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் தமது தேசிய அடையாள அட்டைப்பிரதியுடன் வருகை தரவேண்டும் எனவும், இந்தச் சந்திப்புக்கான தொடர்புகளுக்கு மஸ்கெலிய பிரதேச சபை, உறுப்பினரும் அரங்கத்தின் சிவில் சமூக இணைப்பாளருமான மு. சுரேஷ்குமாரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தயாராகிறார் திலகர் 2023 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நுவரெலியா மாவட்ட இளைஞர்,யுவதிகள் பொது அமைப்புகள், தோழமைக் கட்சிகள் உடனான ஆரம்ப கலந்துரையாடல் ஒன்றை மலையக அரசியல் அரங்கம் 30-12-2022 அன்று காலை 9:30 முதல் மாலை 4:30 வரை ஹட்டன் கிவி ஹோட்டலில்  ஒழுங்கு செய்துள்ளது.அரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியர்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வின் நெறிப்படுத்தலில், செயலாளர் நா. கிருஷ்ணகுமார் சந்திப்பைச் செயற்படுத்துவார்.மகளிர் இணைப்பாளர்களாக மகளிர் அணியின் ரஷீதா - டிலானி ஆகியோர் செயற்படவுள்ளதுடன் சந்திப்பு ஒழுங்கமைப்புப் பணிகளை தேசிய அமைப்பாளர் பி. கே.ரவி மேற்கொண்டுள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு அவசியாமான ஆலோசனைகளை வழங்குவதுடன் மாதிரி விண்ணப்பங்களும் விநியோகிக்கப்படவுள்ளன.ஆர்வமுள்ளவர்கள் தமது தேசிய அடையாள அட்டைப்பிரதியுடன் வருகை தரவேண்டும் எனவும், இந்தச் சந்திப்புக்கான தொடர்புகளுக்கு மஸ்கெலிய பிரதேச சபை, உறுப்பினரும் அரங்கத்தின் சிவில் சமூக இணைப்பாளருமான மு. சுரேஷ்குமாரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement