இன்றைய ராசிபலன்-14.10.2021

126

மேஷராசி அன்பர்களே

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

ரிஷபராசி அன்பர்களே

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மிதுனராசி அன்பர்களே

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கடகராசி அன்பர்களே

புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெரும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மராசி அன்பர்களே

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வேற்று மதத்தவர் உதவுவார். வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் நடந்து கொள்வீர்கள். நல்லன நடக்கும் நாள்.

கன்னிராசி அன்பர்களே

புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாராசி அன்பர்களே

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

விருச்சிகராசி அன்பர்களே

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுராசி அன்பர்களே

உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மகரராசி அன்பர்களே

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கும்பராசி அன்பர்களே

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

மீனராசி அன்பர்களே

ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: