• Sep 30 2024

தொழிற்சங்கங்களின் இன்றைய போராட்டம் தோல்வி – மக்கள் தெளிவாகியுள்ளனர் - சமன் ரத்னப்பிரிய! SamugamMedia

Tamil nila / Mar 1st 2023, 4:33 pm
image

Advertisement

இன்றைய தொழிற்சங்க புறக்கணிப்பின் மூலம் மக்களை வீதிக்கு கொண்டுவர நினைத்தவர்களினால் அது முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.


இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், 

குறித்த போராட்டமானது தோல்வியடைந்துள்ளது.


சில ஊழியர்கள் சுகயீன விடுமுறையில், சில ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

அதேபோல் ரயில்வே துறையில் பணிப்புறக்கணிப்புகள் எதுவும் இல்லை. ரயில் சேவைகள் வழமை போன்று இயங்குகின்றன. 


அவ்வாறே இலங்கை போக்குவரத்து சபை எந்த பணிப்புறக்கணிப்பையும் மேற்கொள்ளவில்லை. இதிலிருந்து தெளிவாக எமக்கு புலனாகிறது, சில அரசியல் கட்சிகள் பாரியளவிலான பணிப்புறக்கணிப்பினை ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லித்திரிந்தாலும், அவை சொல்லுமளவு வெற்றியளிக்காத ஒன்றாகி விட்டது.


சில வங்கிகளில் மட்டும் அதன் சேவைகளில் தாமதம் மற்றும் பணிப்புறக்கணிப்பினை காணக்கூடியதாக இருந்தது. 


மக்களை வீதிக்கு கொண்டுவர நினைத்தார்கள், ஆனால் அது முடியாது போயுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொழிற்சங்கங்களின் இன்றைய போராட்டம் தோல்வி – மக்கள் தெளிவாகியுள்ளனர் - சமன் ரத்னப்பிரிய SamugamMedia இன்றைய தொழிற்சங்க புறக்கணிப்பின் மூலம் மக்களை வீதிக்கு கொண்டுவர நினைத்தவர்களினால் அது முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், குறித்த போராட்டமானது தோல்வியடைந்துள்ளது.சில ஊழியர்கள் சுகயீன விடுமுறையில், சில ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல் ரயில்வே துறையில் பணிப்புறக்கணிப்புகள் எதுவும் இல்லை. ரயில் சேவைகள் வழமை போன்று இயங்குகின்றன. அவ்வாறே இலங்கை போக்குவரத்து சபை எந்த பணிப்புறக்கணிப்பையும் மேற்கொள்ளவில்லை. இதிலிருந்து தெளிவாக எமக்கு புலனாகிறது, சில அரசியல் கட்சிகள் பாரியளவிலான பணிப்புறக்கணிப்பினை ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லித்திரிந்தாலும், அவை சொல்லுமளவு வெற்றியளிக்காத ஒன்றாகி விட்டது.சில வங்கிகளில் மட்டும் அதன் சேவைகளில் தாமதம் மற்றும் பணிப்புறக்கணிப்பினை காணக்கூடியதாக இருந்தது. மக்களை வீதிக்கு கொண்டுவர நினைத்தார்கள், ஆனால் அது முடியாது போயுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement