• Apr 25 2024

எலன் மஸ்க்கை பின் தள்ளிய உலகின் முதல் பணக்காரர்!

Sharmi / Dec 21st 2022, 9:56 pm
image

Advertisement

இன்று உலகின் முதல் பணக்காரர் எலன் மஸ்க் அல்ல. கடந்த வருடம் amazon நிறுவன உரிமையாளர் jeff bezoz ஐப் பின்தள்ளி உலகின் முதலாவது பணக்காரர் என்ற பெயரைப் பெற்றிருந்தார் டெஸ்லா மற்றும் spaceX நிறுவன உரிமையாளர் எலன் மஸ்க். ஒரு வருடம் நிறைவு பெற்று சிறிது நாளிற்குள், இன்று உலகின் முதலாவது பணக்காரர் எனும் புகழைத் தட்டிச் சென்றுள்ளார் பிரான்ஸ் நாட்டின் முன்னணிப் பணக்காரர் ஆன bernard arnault. பிரபல ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் வணிக சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான இவர் எலன் மஸ்க்கை வெல்லும் அளவிற்கு வளர்ந்தது எவ்வாறு? யார் இந்த bernard arnault என்பது தொடர்பாக பார்க்கலாம். 

கடந்த டிசம்பர் 20ஆம் திகதி forbes ஊடகம் மேற்கொண்டிருந்த கணிப்பின் படி, பிரான்ஸ் முன்னணி பணக்காரரான 73 வயதுடைய bernard arnault இன் சொத்து பெறுமதி 180.2பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது ஏறத்தாழ எலன் மஸ்கின் சொத்து பெறுமதியை விட 17பில்லியன் டாலர் அதிகமானது எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக இன்று எலன் மஸ்க்கை வென்று உலகின் முதலாவது பணக்காரர் என்ற பெயரை இவர் தன்வசப்படுத்தி உள்ளார்.

பிரான்ஸ்ஸில் மிகவும் புகழ்வாய்ந்த பிரபல நிறுவனமான LVMH என அழைக்கப்படும் Moet Hennessy Louis Vuitton நிறுவனத்தின் ஆரம்ப ஸ்தாபகர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவராக இன்று bernard arnault இருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டில் அதிகம் பங்கு விற்பனை செய்யப்பட்ட நிறுவனமான LVMH இல் அதிக பங்குகளை இந்த நிறுவனமே கொள்வனவு செய்து இருக்கின்றது என்பதோடு இதன் காரணமாக அதன் வாக்குரிமையும் பெருமளவு நிறுவனத்திற்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் நிலை பணக்காரராக இவர் பெயர் பெறுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் குறுகிய கால இடைவெளிக்கு இவர் உலகின் முதலாவது பணக்காரராக இருந்துள்ளார். அதேபோல தற்போதும் எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை மீண்டும் லாப சுழற்சிக்கு கொண்டு வருவாராக இருந்தால் மீண்டும் bernard arnault இந்த இடத்தில் இருந்து அகற்றப்படுவார்.

எவ்வாறாயினும் அவருடைய சாதனைகள் மற்றும் வளர்ச்சி புறக்கணிக்கத்தக்கவை அல்ல. இவருடைய நிறுவனமான LVMH என்பது, 75 வகையான ஆடம்பர உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனமாக இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை உற்பத்திகள் ஆடம்பர குடிவகை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் 2021ஆம் ஆண்டில் 68.2பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி இருந்தது.

இது ஏற்கனவே 2019ஆம் ஆண்டில் இருந்த வருவாயை விட 20% அதிகமானது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதில் பேஷன் மற்றும் லெதர் பொருட்கள் 48% ஆன வருவாயைத் தேடித் தந்திருந்தன.

இந்நிலையில் இந்த நிறுவனமே உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தில் மொத்தம் 175 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்ற அதேவேளை நிறுவனம் மொத்தம் 5500 கிளைகளை கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி நிறுவனத்தின் சந்தை பெறுமதி 371பில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மாஸ்டர் கார்டு,  ஜெஃப்ரான், நெஸ்ட்லி ஆகிய முன்னணி நிறுவனங்களை பின்தள்ளி இந்த நிறுவனம் உலகின் பெருமதி வாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் முன் இடத்தை பெற்றது. 

ஏனைய முன்னணி பணக்காரர்களுடன் ஒப்பிடும் போது, bernard arnault பிரான்ஸை விட்டு வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாத ஒரு நபராகவே இருக்கின்றார். ஆனால் இவருடைய தயாரிப்பு பொருட்கள் வெளி உலகத்திற்கு புதியவை அல்ல. இவருடைய நிறுவனத்தின் சில பெயர் போன தயாரிப்பு brand களாக பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும். Bulgari, Dior, Fendi, Givenchy and, of course, Louis Vuitton ஆகியவை.

இவற்றுக்கு மேல் அதிகமாக பிரான்சில் செபோற எனும் டிபார்ட்மென்ட் store ஐயும் நிறுவனம் உள்ளடக்கியுள்ளது. நிறுவனத்தின் ஆரம்பகால தயாரிப்புகளில் ஒன்றாக Chateau d’Yquem wine ஐக் குறிப்பிட முடியும். இது 16ஆம் நூற்றாண்டில் இருந்து பெயர் போன wine தயாரிப்பு நிறுவனமாக இருந்துள்ளது. 

அமெரிக்காவில் 2019 ஆம் ஆண்டு Tiffany அன்ட் co எனும் பிரபல நகை தயாரிப்பு நிறுவனத்தை 16 பில்லியன் டாலர் பெறுமதிக்கு இவர் கொள்வனவு செய்த போது பெரிதும் பேசப்பட்டார். இதன் பின்னர் ஜெர்மனியில் 2021 ஆம் ஆண்டு பிரபல சந்தன தயாரிப்பு நிறுவனமான Birkenstock நிறுவனத்தைக் கொள்வனவு செய்த போது ஜெர்மனியிலும் இவரது புகழ் பேசப்பட்டது.

bernard arnault இன் ஆரம்பகால வளர்ச்சி பற்றிப் பார்க்கும் போது, இவர் பெல்ஜிய எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு பிரான்சில் பிறந்தார். பொறியியல் படிப்பை முடித்த பிறகு, அவர் தனது தந்தையின் கட்டுமான நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அவர் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் கவனம் செலுத்தி விரைவில் அதன் தலைவராக ஆனார்.

1984 ஆம் ஆண்டில், அவர் கிறிஸ்டியன் டியோர் மற்றும் லு பான் மார்சே டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திவால் நிலையில் இருந்த வணிகத்தை பொறுப்பெடுத்தார்.

இதுவே ஆடம்பர சந்தையில் அவர் நுழைந்த முதல் சந்தர்ப்பம் என கூறப்பட முடியும். 1987 இல், லூயிஸ் உய்ட்டன் மற்றும் மொயட் ஹென்னெஸ்ஸி ஆகிய இரண்டு நிறுவனங்களையும் இணைத்து LVHM ஆடம்பர நிறுவனம் உருவாக்கப்பட்டது.

விரைவில் வளர்ச்சி அடைந்த bernard arnault, ஏனையவர்களைப் பின் தள்ளி 1989 இல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை அதே பதவியில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவர் ஆகியதைத் தொடர்ந்து அவர் செய்த முதலாவது வேலை ஏற்கனவே இருந்த பாரம்பரிய நிர்வாக குழுக்களின் கட்டுப்பாட்டை மாற்றி புதிய நவீனத்துவம் வாய்ந்த நிர்வாக நடைமுறைகளைக் கொண்டு வந்து அதற்கான புதிய ஊழியர்களை நியமித்து, நிறுவனங்களின் நிர்வாகங்களை நவீன முறையில் மேற்கொள்ள ஆரம்பித்தமை. 1999 ஆம் ஆண்டு International Herald Tribune ஊடகம் இவரை lord of the logos - அதாவது இலட்சினைகளின் லார்ட் என வர்ணித்து இருந்தது.

இதற்குப் பிரதான காரணம் bernard arnault, தன்னுடைய ஒவ்வொரு நிறுவனத்தின் இலட்சினையையும் நிறுவனத்தின் தனித்துவத்தையும் தரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டதோடு அந்த இலட்சினைகளின் தரத்தை பேணுவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டு வந்தமை என குறிப்பிடப்படுகின்றது.

நிறுவனம் அடுத்து தனது முதலாவது பெரிய சந்தையாக ஆசியாவை மையப்படுத்தி அபிவிருத்தியை ஆரம்பித்தது. இதனை அடுத்து அமெரிக்கா இரண்டாவதாகவும், ஐரோப்பா மூன்றாவதாகவும் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தைகளாக மாறின. இந்த நிறுவனங்கள் ஆரம்பத்தில் அவற்றின் இலட்ச்சினை பதித்த பெல்ட் போன்ற சிறிய பொருட்களை குறைந்த விலைக்கு தமது இலட்சினையுடன் விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இதன் காரணமாக நிறுவனங்களின் பிராண்ட் அதிகளவு இளைஞர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது. 

bernard arnault இன் வெற்றிக்கு மற்றுமொரு பிரதான காரணமாக இருந்தது, அவர் காலத்தின் மாற்றங்களிற்கு ஏற்ப ஓடக்கூடியவராக இருந்தமை. வணிகங்கள் அனைத்தும் இணையமயப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இவர் தன்னுடைய நிறுவனங்கள் அனைத்திற்குமான ஆன்லைன் தளங்களை உருவாக்கி அவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கும் பின் நிற்கவில்லை.

இதன் காரணமாக வளர்ச்சியடைந்து இன்று மாபெரும் விருட்சமாக இருக்கும் LVHM நிறுவனம், இன்று, bernard arnault இன் குடும்ப சொத்தாக மாறி உள்ளது. இன்று அவரது ஐந்து பிள்ளைகளும் 5 வெவ்வேறு பதவிகளில் கடமையாற்றி வருகின்றனர். bernard arnault ஐப் பற்றி வெளி உலகம் அறிந்த விடயங்களாக, எப்போதும் சீரான ஆடை அணிபவர் என்பதும், நரை முடி உடையவர் என்பதும், டென்னிஸ் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டவர் என்பதும் மாத்திரமே அறியப்பட்டுள்ளன. இவரது சகாக்களும் இவரிடம் பணி புரிபவர்களும் இவரைப் பற்றிப் பேசுவது மிக மிகக் குறைவாகவே பேசுகின்றனர். 

2014 இல், இவருடைய லூயிஸ் உய்ட்டன் அறக்கட்டளை பாரிஸில் திறக்கப்பட்டது. அவர் தொண்டு நிறுவனங்களுக்கும் நோட்ரே டேம் கதீட்ரலின் மறுசீரமைப்பிற்காகவும் மில்லியன் கணக்கான நன்கொடை அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எலன் மஸ்க்கை பின் தள்ளிய உலகின் முதல் பணக்காரர் இன்று உலகின் முதல் பணக்காரர் எலன் மஸ்க் அல்ல. கடந்த வருடம் amazon நிறுவன உரிமையாளர் jeff bezoz ஐப் பின்தள்ளி உலகின் முதலாவது பணக்காரர் என்ற பெயரைப் பெற்றிருந்தார் டெஸ்லா மற்றும் spaceX நிறுவன உரிமையாளர் எலன் மஸ்க். ஒரு வருடம் நிறைவு பெற்று சிறிது நாளிற்குள், இன்று உலகின் முதலாவது பணக்காரர் எனும் புகழைத் தட்டிச் சென்றுள்ளார் பிரான்ஸ் நாட்டின் முன்னணிப் பணக்காரர் ஆன bernard arnault. பிரபல ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் வணிக சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான இவர் எலன் மஸ்க்கை வெல்லும் அளவிற்கு வளர்ந்தது எவ்வாறு யார் இந்த bernard arnault என்பது தொடர்பாக பார்க்கலாம். கடந்த டிசம்பர் 20ஆம் திகதி forbes ஊடகம் மேற்கொண்டிருந்த கணிப்பின் படி, பிரான்ஸ் முன்னணி பணக்காரரான 73 வயதுடைய bernard arnault இன் சொத்து பெறுமதி 180.2பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ எலன் மஸ்கின் சொத்து பெறுமதியை விட 17பில்லியன் டாலர் அதிகமானது எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக இன்று எலன் மஸ்க்கை வென்று உலகின் முதலாவது பணக்காரர் என்ற பெயரை இவர் தன்வசப்படுத்தி உள்ளார்.பிரான்ஸ்ஸில் மிகவும் புகழ்வாய்ந்த பிரபல நிறுவனமான LVMH என அழைக்கப்படும் Moet Hennessy Louis Vuitton நிறுவனத்தின் ஆரம்ப ஸ்தாபகர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவராக இன்று bernard arnault இருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் அதிகம் பங்கு விற்பனை செய்யப்பட்ட நிறுவனமான LVMH இல் அதிக பங்குகளை இந்த நிறுவனமே கொள்வனவு செய்து இருக்கின்றது என்பதோடு இதன் காரணமாக அதன் வாக்குரிமையும் பெருமளவு நிறுவனத்திற்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் நிலை பணக்காரராக இவர் பெயர் பெறுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் குறுகிய கால இடைவெளிக்கு இவர் உலகின் முதலாவது பணக்காரராக இருந்துள்ளார். அதேபோல தற்போதும் எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை மீண்டும் லாப சுழற்சிக்கு கொண்டு வருவாராக இருந்தால் மீண்டும் bernard arnault இந்த இடத்தில் இருந்து அகற்றப்படுவார்.எவ்வாறாயினும் அவருடைய சாதனைகள் மற்றும் வளர்ச்சி புறக்கணிக்கத்தக்கவை அல்ல. இவருடைய நிறுவனமான LVMH என்பது, 75 வகையான ஆடம்பர உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனமாக இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை உற்பத்திகள் ஆடம்பர குடிவகை என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் 2021ஆம் ஆண்டில் 68.2பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி இருந்தது. இது ஏற்கனவே 2019ஆம் ஆண்டில் இருந்த வருவாயை விட 20% அதிகமானது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதில் பேஷன் மற்றும் லெதர் பொருட்கள் 48% ஆன வருவாயைத் தேடித் தந்திருந்தன. இந்நிலையில் இந்த நிறுவனமே உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தில் மொத்தம் 175 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்ற அதேவேளை நிறுவனம் மொத்தம் 5500 கிளைகளை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி நிறுவனத்தின் சந்தை பெறுமதி 371பில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மாஸ்டர் கார்டு,  ஜெஃப்ரான், நெஸ்ட்லி ஆகிய முன்னணி நிறுவனங்களை பின்தள்ளி இந்த நிறுவனம் உலகின் பெருமதி வாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் முன் இடத்தை பெற்றது. ஏனைய முன்னணி பணக்காரர்களுடன் ஒப்பிடும் போது, bernard arnault பிரான்ஸை விட்டு வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாத ஒரு நபராகவே இருக்கின்றார். ஆனால் இவருடைய தயாரிப்பு பொருட்கள் வெளி உலகத்திற்கு புதியவை அல்ல. இவருடைய நிறுவனத்தின் சில பெயர் போன தயாரிப்பு brand களாக பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும். Bulgari, Dior, Fendi, Givenchy and, of course, Louis Vuitton ஆகியவை. இவற்றுக்கு மேல் அதிகமாக பிரான்சில் செபோற எனும் டிபார்ட்மென்ட் store ஐயும் நிறுவனம் உள்ளடக்கியுள்ளது. நிறுவனத்தின் ஆரம்பகால தயாரிப்புகளில் ஒன்றாக Chateau d’Yquem wine ஐக் குறிப்பிட முடியும். இது 16ஆம் நூற்றாண்டில் இருந்து பெயர் போன wine தயாரிப்பு நிறுவனமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் 2019 ஆம் ஆண்டு Tiffany அன்ட் co எனும் பிரபல நகை தயாரிப்பு நிறுவனத்தை 16 பில்லியன் டாலர் பெறுமதிக்கு இவர் கொள்வனவு செய்த போது பெரிதும் பேசப்பட்டார். இதன் பின்னர் ஜெர்மனியில் 2021 ஆம் ஆண்டு பிரபல சந்தன தயாரிப்பு நிறுவனமான Birkenstock நிறுவனத்தைக் கொள்வனவு செய்த போது ஜெர்மனியிலும் இவரது புகழ் பேசப்பட்டது.bernard arnault இன் ஆரம்பகால வளர்ச்சி பற்றிப் பார்க்கும் போது, இவர் பெல்ஜிய எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு பிரான்சில் பிறந்தார். பொறியியல் படிப்பை முடித்த பிறகு, அவர் தனது தந்தையின் கட்டுமான நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அவர் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் கவனம் செலுத்தி விரைவில் அதன் தலைவராக ஆனார். 1984 ஆம் ஆண்டில், அவர் கிறிஸ்டியன் டியோர் மற்றும் லு பான் மார்சே டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திவால் நிலையில் இருந்த வணிகத்தை பொறுப்பெடுத்தார். இதுவே ஆடம்பர சந்தையில் அவர் நுழைந்த முதல் சந்தர்ப்பம் என கூறப்பட முடியும். 1987 இல், லூயிஸ் உய்ட்டன் மற்றும் மொயட் ஹென்னெஸ்ஸி ஆகிய இரண்டு நிறுவனங்களையும் இணைத்து LVHM ஆடம்பர நிறுவனம் உருவாக்கப்பட்டது. விரைவில் வளர்ச்சி அடைந்த bernard arnault, ஏனையவர்களைப் பின் தள்ளி 1989 இல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை அதே பதவியில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவர் ஆகியதைத் தொடர்ந்து அவர் செய்த முதலாவது வேலை ஏற்கனவே இருந்த பாரம்பரிய நிர்வாக குழுக்களின் கட்டுப்பாட்டை மாற்றி புதிய நவீனத்துவம் வாய்ந்த நிர்வாக நடைமுறைகளைக் கொண்டு வந்து அதற்கான புதிய ஊழியர்களை நியமித்து, நிறுவனங்களின் நிர்வாகங்களை நவீன முறையில் மேற்கொள்ள ஆரம்பித்தமை. 1999 ஆம் ஆண்டு International Herald Tribune ஊடகம் இவரை lord of the logos - அதாவது இலட்சினைகளின் லார்ட் என வர்ணித்து இருந்தது. இதற்குப் பிரதான காரணம் bernard arnault, தன்னுடைய ஒவ்வொரு நிறுவனத்தின் இலட்சினையையும் நிறுவனத்தின் தனித்துவத்தையும் தரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டதோடு அந்த இலட்சினைகளின் தரத்தை பேணுவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டு வந்தமை என குறிப்பிடப்படுகின்றது.நிறுவனம் அடுத்து தனது முதலாவது பெரிய சந்தையாக ஆசியாவை மையப்படுத்தி அபிவிருத்தியை ஆரம்பித்தது. இதனை அடுத்து அமெரிக்கா இரண்டாவதாகவும், ஐரோப்பா மூன்றாவதாகவும் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தைகளாக மாறின. இந்த நிறுவனங்கள் ஆரம்பத்தில் அவற்றின் இலட்ச்சினை பதித்த பெல்ட் போன்ற சிறிய பொருட்களை குறைந்த விலைக்கு தமது இலட்சினையுடன் விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இதன் காரணமாக நிறுவனங்களின் பிராண்ட் அதிகளவு இளைஞர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது. bernard arnault இன் வெற்றிக்கு மற்றுமொரு பிரதான காரணமாக இருந்தது, அவர் காலத்தின் மாற்றங்களிற்கு ஏற்ப ஓடக்கூடியவராக இருந்தமை. வணிகங்கள் அனைத்தும் இணையமயப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இவர் தன்னுடைய நிறுவனங்கள் அனைத்திற்குமான ஆன்லைன் தளங்களை உருவாக்கி அவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கும் பின் நிற்கவில்லை.இதன் காரணமாக வளர்ச்சியடைந்து இன்று மாபெரும் விருட்சமாக இருக்கும் LVHM நிறுவனம், இன்று, bernard arnault இன் குடும்ப சொத்தாக மாறி உள்ளது. இன்று அவரது ஐந்து பிள்ளைகளும் 5 வெவ்வேறு பதவிகளில் கடமையாற்றி வருகின்றனர். bernard arnault ஐப் பற்றி வெளி உலகம் அறிந்த விடயங்களாக, எப்போதும் சீரான ஆடை அணிபவர் என்பதும், நரை முடி உடையவர் என்பதும், டென்னிஸ் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டவர் என்பதும் மாத்திரமே அறியப்பட்டுள்ளன. இவரது சகாக்களும் இவரிடம் பணி புரிபவர்களும் இவரைப் பற்றிப் பேசுவது மிக மிகக் குறைவாகவே பேசுகின்றனர். 2014 இல், இவருடைய லூயிஸ் உய்ட்டன் அறக்கட்டளை பாரிஸில் திறக்கப்பட்டது. அவர் தொண்டு நிறுவனங்களுக்கும் நோட்ரே டேம் கதீட்ரலின் மறுசீரமைப்பிற்காகவும் மில்லியன் கணக்கான நன்கொடை அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement