டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றவர்களின் விபரம்!

டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வு கடந்த 09ம் திகதி York Cinemas 115 York Boulevard Richmond Hill, ON L4B 3B4 இல் நடைபெற்றது.

இந்நிலையில் குறித்த திரைப்பட விழாவில் விருது பெற்றவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வாகியுள்ள திரைப்படங்களும், திரைக் கலைஞர்களும், தயாரிப்பாளர்களும் மிகச்சிறப்பாக கலைத்திறன் மற்றும் ஆக்கத்திறனை வெளிப்படுத்தி இந்த விருதுகளை வென்றுள்ளனர்.

விருதுகளின் விபரங்கள்

ஜூரி விருதுகள்.

சிறந்த திரைப்படத்திற்கான ஜூரி விருது : இரவின் நிழல் (இயக்குனர்: ராதாகிருஷ்ணன் பார்த்திபன்)

சிறந்த திரைப்பட இயக்குனர்க்கான ஜூரி விருது : ராதாகிருஷ்ணன் பார்த்திபன் (இரவின் நிழல்)

சிறந்த ஆவணப்படத்திற்கான ஜூரி விருது : Dramayama (இயக்குனர்: Jeanette Groenendal- ஜேனட் க்ரோனென்டால்)

சிறந்த புராணம் சார் திரில்லர் திரைப்படத்திற்கான ஜூரி விருது : மாயோன் (இயக்குனர் – கிஷோர்:  திரைக்கதை – அருண் மொழி மாணிக்கம்)

சிறந்த நடிகருக்கான ஜூரி விருது: விஜய் சேதுபதி (திரைப்படம்: மாமனிதன்)

பார்வையாளர் விருது

சிறந்த திரைப்படத்திற்கான பார்வையாளர் விருது: மாமனிதன் (இயக்குனர்: சீனு ராமசாமி)

சிறந்த குறும்படங்களிற்கான பார்வையாளர் விருது: சித்திர மடல் (இயக்குனர்: கார்த்திக் கண்ணப்பன்)

சிறந்த குறும்படங்களிற்கான பார்வையாளர் விருது: ஒரு நாள் ஒரு கனவு (இயக்குனர்: ஸ்ரீவித்யா சி மௌலி, ஸ்ரீராம் எம்)

சிறப்பு நடுவர் விருது: சிறந்த குறும்பட ஆவணப்படத்திற்கான சிறப்பு நடுவர் விருது: லிவிங் வீல்ஸ் (இயக்குனர்: ஸ்ரீதாஸ் எஸ்)

சிறந்த சமூக செய்தி குறும்பட இயக்குனர் விருது: குபேந்திரன் பெரியசாமி (திரைப்படம்: என் மகன்)

சமூக பிரச்சனைகள் பற்றிய சிறந்த குறும்படத்திற்கான விருது: முத்தையா வீடு (இயக்குனர்: சுரேந்தர் ராஜேந்திரன்)

சிறந்த நீண்ட குறும்படத்திற்கான விருது: அக்டோபர் 22 (இயக்குனர்: நவ்ரோஸ் கான்)

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது: திரைப்படம்: இரவின் நிழல்

சிறப்பு ஜூரி விருதுகள்:

சிறந்த செயல்திறன் ரைசிங் ஸ்டார் வளர்ந்து வரும் இயக்குனர்: கார்த்திக் சாமலன் (அடை மழை காலம்)

சிறந்த அறிமுக பெண் நடிகருக்கான விருது: சினேகா குமார் (திரைப்படம்: இரவின் நிழல்)

சிறந்த அறிமுக இசை இயக்குனருக்கான விருது: ரேவா என்ற ரேவதி விஸ்வநாதன் (திரைப்படம்: முகிழ்)

ஆல்பம் பாடலுக்கான விருதுகள் சிறந்த ஆல்பம் பாடலுக்கான விருது: கோவக்குயிலே (ரேஷ்மான் குமார்)

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை