குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட விபரீதம்; துப்பாக்கி பிரயோகத்தால் ஏற்பட்ட அசம்பாவிதம்..!

265

குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது அண்ணன் மீது தம்பி ஒருவர் துப்பாக்கி சூடு மேற்கொண்ட சம்பவம் மாத்தளை-வில்கமுவ பகுதியில் பதிவாகியுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு வில்கமுவ பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடு மோதலாக மாறியதாகவும் இதன் காரணமாக இருவருக்கிடையிலும் துப்பாக்கி சூட்டு மோதல் இடம்பெற்றதாகவும் காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும் இச் சம்பவத்தில் காயமடைந்த மூத்த சகோதரர் (38வயது) சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய நபர் (காயமடைந்தவரின் இளைய சகோதரர்) சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக காவற்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.மேலும் இது குறித்த மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: