ஜல்லிக்கட்டில் சோகம் – ஒருவர் உயிரிழப்பு – மதுரை அவனியாபுரம்

67

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 401ஆவது காளையாக வாடிவாசல் வழியாக வந்தபோது மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.