• Apr 25 2024

இலங்கை பாதுகாப்புப் படையினர்களுக்கான பயிற்சிகள் - இஸ்ரேல் நாட்டுடன் விசேட கலந்துரையாடல்! samugammedia

Chithra / Jun 7th 2023, 11:07 am
image

Advertisement

நாட்டின் பாதுகாப்புப் படையினர்களுக்கான பயிற்சி வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்தாலோசித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் இராணுவத்தினருக்கு பயிற்சி வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அவிஹாய் சஃப்ரானி கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போதே இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.


இலங்கை பாதுகாப்புப் படையினர்களுக்கான பயிற்சிகள் - இஸ்ரேல் நாட்டுடன் விசேட கலந்துரையாடல் samugammedia நாட்டின் பாதுகாப்புப் படையினர்களுக்கான பயிற்சி வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்தாலோசித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் இராணுவத்தினருக்கு பயிற்சி வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.புதுடெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அவிஹாய் சஃப்ரானி கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.இச்சந்திப்பின் போதே இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement