• Sep 30 2024

இளைஞர்களை அரசியல் தேவைகளுக்கு இரையாக்க முயற்சி! புலனாய்வு துறை அறிக்கையில் தகவல் samugammedia

Chithra / Apr 19th 2023, 7:29 am
image

Advertisement

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாக்கி இளைஞர்கள் அசெனகரியங்களுக்கு ஆளாக்கி, அவ்வாறு அசெளகரியங்களுக்கு ஆளான இளைஞர்களை அடிப்படைவாத அரசியல் தேவைகளுக்காக இரையாக்கிக்கொள்ள முயற்சிப்பதாக புலனாய்வு துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாவதன் காரணமாக 18, 20 வயதுடைய இளைஞர்கள் கடும் அசெளகரியங்களுக்கு ஆளாவதுடன் அசெளகரியங்களுக்கு ஆளாகி உள்ள அந்த இளைஞர்களை தவறாக பயன்படுத்திக்கொண்டு குறுகிய அரசியல் நோக்கத்தை அடைந்துகொள்ள அடிப்படைவாத குறுகிய அரசியல்வாதிகள் பிரிவொன்று முயற்சித்து வருவதாக கடந்த வார புலனாய்வு பிரிவின் அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைக்காக ஆசிரியர்களின் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது  செய்முறை பரீட்சை தாமதிக்காமல் நடத்துவதன் மூலம்  ஏற்படக்கூடிய தாமதிப்பை முடியுமானளவு கட்டுப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து, பொதுவான தேசிய தேவைப்பாடாக கருதி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் அந்த சேவையில் விரைவாக ஈடுபடுவார்கள் என ஆளும் எதிர்க்கட்சி பேதமில்லாது அனைத்து சமூகமும் எதிர்பார்க்கிறது. அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இளைஞர்களை அரசியல் தேவைகளுக்கு இரையாக்க முயற்சி புலனாய்வு துறை அறிக்கையில் தகவல் samugammedia கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாக்கி இளைஞர்கள் அசெனகரியங்களுக்கு ஆளாக்கி, அவ்வாறு அசெளகரியங்களுக்கு ஆளான இளைஞர்களை அடிப்படைவாத அரசியல் தேவைகளுக்காக இரையாக்கிக்கொள்ள முயற்சிப்பதாக புலனாய்வு துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாவதன் காரணமாக 18, 20 வயதுடைய இளைஞர்கள் கடும் அசெளகரியங்களுக்கு ஆளாவதுடன் அசெளகரியங்களுக்கு ஆளாகி உள்ள அந்த இளைஞர்களை தவறாக பயன்படுத்திக்கொண்டு குறுகிய அரசியல் நோக்கத்தை அடைந்துகொள்ள அடிப்படைவாத குறுகிய அரசியல்வாதிகள் பிரிவொன்று முயற்சித்து வருவதாக கடந்த வார புலனாய்வு பிரிவின் அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைக்காக ஆசிரியர்களின் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது  செய்முறை பரீட்சை தாமதிக்காமல் நடத்துவதன் மூலம்  ஏற்படக்கூடிய தாமதிப்பை முடியுமானளவு கட்டுப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து, பொதுவான தேசிய தேவைப்பாடாக கருதி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் அந்த சேவையில் விரைவாக ஈடுபடுவார்கள் என ஆளும் எதிர்க்கட்சி பேதமில்லாது அனைத்து சமூகமும் எதிர்பார்க்கிறது. அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement