தமிழ் தலைப்புகளை அறிமுகம் செய்வதாக டிவிட்டர் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
டிவிட்டரில் தமிழை தங்களின் முதன்மை மொழியாக தேர்வு செய்துள்ள பயனாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
பன்முக, பல மொழி கலாச்சாரங்களைக் கொண்ட பயனாளர்களுக்கு சேவை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
மேலும், டிவிட்டரில் தமிழை முதன்மை மொழியாக வைத்திருப்பவர்களுக்கு, தமிழ் இலக்கியம், இசை, கவிதை மற்றும் பல விஷயங்கள் தொடர்பான ஆர்வத்தை தூண்டுகின்ற விவாதங்களை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிட்டரை வெகு விரைவாக உள்வாங்கிக் கொண்டவர்கள் தமிழ் வாடிக்கையாளர்கள் தமிழ் தலைப்புகள் அறிமுகம் செய்யப்படுவதற்கான காரணம் குறித்து டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து டிவிட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் செரில் அன் கோடோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல ஆண்டுகளாக விசாலமான மற்றும் சம கால விவாதங்களை மேற்கொள்வதற்கான தளத்தை டிவிட்டர் நிறுவனம் வழங்கி வருகிறது.
குறிப்பாக, ஒரே சிந்தனை கொண்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், டிவிட்டர் தளத்தை வெகு விரைவாக உள்வாங்கிக் கொண்டு பயன்படுத்த தொடங்கியவர்கள் தமிழ் வாடிக்கையாளர்கள்.
அவர்களது ஆர்வத்தை கொண்டாடும் வகையில், நாங்கள் #TamilSpaces என்ற எமோஜியை அறிமுகம் செய்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறசெய்திகள்