• Mar 28 2024

வெளிநாட்டில் வேலை எனக்கூறி மோசடி: இருவர் கைது!

Tamil nila / Jan 13th 2023, 10:03 pm
image

Advertisement

கடந்த ஓராண்டாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், வெளிநாடுகளில் தஞ்சம் கோருவது, ஏதாவது ஒரு வழியில் வேலைத் தேடி செல்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதே போல், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செயல்களும் அரங்கேறி வருகின்றன.



அந்த வகையில், கடந்த ஜனவரி 4ம் தேதி இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து  நீர்கொழும்பு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்து அங்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்



சட்டவிரோதமாக புலம்பெயர்வதற்காக 20 பேரிடம் 50 லட்சம் இலங்கை ரூபாயினை இவர்கள் வசூலித்திருக்கின்றனர். இந்த சந்தேக நபர்கள் சிலாபம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என இலங்கை கடற்படையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் நீர்கொழும்பு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

வெளிநாட்டில் வேலை எனக்கூறி மோசடி: இருவர் கைது கடந்த ஓராண்டாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், வெளிநாடுகளில் தஞ்சம் கோருவது, ஏதாவது ஒரு வழியில் வேலைத் தேடி செல்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதே போல், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செயல்களும் அரங்கேறி வருகின்றன.அந்த வகையில், கடந்த ஜனவரி 4ம் தேதி இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து  நீர்கொழும்பு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்து அங்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்சட்டவிரோதமாக புலம்பெயர்வதற்காக 20 பேரிடம் 50 லட்சம் இலங்கை ரூபாயினை இவர்கள் வசூலித்திருக்கின்றனர். இந்த சந்தேக நபர்கள் சிலாபம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என இலங்கை கடற்படையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் நீர்கொழும்பு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement