பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட அறுபது கிராம் நூற்றி எண்பது மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் இன்று (22) கைது செய்யப்பட்டதாக கொழும்பு தெற்கு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த இருவர் (18 மற்றும் 24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஐஸ் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக கொழும்பு தெற்கு பிரதேச விஷ போதைப்பொருள் தடுப்பு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் பரிசோதகர் ஷெஹான் ஆனந்தவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொரளை மவுன்ட் மேரி சந்திக்கு அருகில் பாதுகாப்பில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் தடுத்து வைத்துள்ளனர். வீதியில் சென்ற நபரிடம் 05 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவரிடம் இருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் கொள்வனவு செய்யப்பட்ட இடம் தொடர்பில் வினவிய போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிரதான சந்தேகநபருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மற்றுமொரு போதைப்பொருளை கொண்டு வருமாறு கட்டளையிட்டு பொரளைக்கு வந்துள்ளார்.

அப்போது, ​​பொரளை சந்திக்கு அருகில் சுற்றிவளைப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், குறித்த நபரை சோதனையிட்ட போது, ​​அவரிடம் மேலும் 54 கிராம் 660 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் பதினைந்து இலட்சம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையிலிருந்து வந்தவர் எனவும் அவருக்கு எதிரான வழக்கு தற்போது நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் மற்றைய சந்தேக நபருக்கும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், கிராபண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள், மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை