திருகோணமலையில் ஆயுள்வேத வைத்தியர் இருவர் கைது!

109

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுர்வேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சுகளும் டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை தலைமையகப் காவல்துறையினர் தெரிவித்தனர். அண்ணல் நகர், கிண்ணியா-3 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான ஆயுர்வேத வைத்தியரும், ஜாவா நகர்,கிண்ணியா-6 ஜ சேர்ந்த 41 வயதான மீனவர் ஒருவருமே டைனமைட்டுடன் கைதானதாக தலைமையகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களையும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: