• Mar 28 2024

தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ இரண்டு நிறுவனங்கள் அடுத்த நிலைக்கு செல்லவேண்டும்! - வைத்தியர் பாலகோபி

Chithra / Jan 30th 2023, 8:17 pm
image

Advertisement

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்றால் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் 

யாழ் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டின் தரநிலைகளும் அடுத்த நிலைக்கு முன்னேற்றம் அடைய வேண்டுமென சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக பொருத்தப்பட்டு மாபெரும் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து இன்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாலகோபி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான போதிய வளங்கள் பற்றாக்குறையாகவே காணப்படுவதாக பாலகோபி சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த சிகிச்சைகளுக்காக கொழும்பு செல்கின்றவர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் எனவே யாழில் இதனை செய்வதற்கு அனைவரினதும் உதவிகள் தேவைப்படுவதாக பாலகோபி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கான கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதன் நிர்மான பணிகளை நிறைவு செய்வதற்கு சுமார் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாகவும் பாலகோபி சுட்டிக்காட்டியுள்ளார்.


தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ இரண்டு நிறுவனங்கள் அடுத்த நிலைக்கு செல்லவேண்டும் - வைத்தியர் பாலகோபி வடக்கிலுள்ள தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்றால் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டின் தரநிலைகளும் அடுத்த நிலைக்கு முன்னேற்றம் அடைய வேண்டுமென சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி தெரிவித்துள்ளார்.யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக பொருத்தப்பட்டு மாபெரும் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாலகோபி இவ்வாறு தெரிவித்துள்ளார்.சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான போதிய வளங்கள் பற்றாக்குறையாகவே காணப்படுவதாக பாலகோபி சுட்டிக்காட்டியிருந்தார்.இந்த சிகிச்சைகளுக்காக கொழும்பு செல்கின்றவர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் எனவே யாழில் இதனை செய்வதற்கு அனைவரினதும் உதவிகள் தேவைப்படுவதாக பாலகோபி வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கான கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதன் நிர்மான பணிகளை நிறைவு செய்வதற்கு சுமார் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாகவும் பாலகோபி சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement