யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இருவரும் பயணித்த நிலையில், இரு மோட்டார் சைக்கிள்களும் வேககட்டுப்பாட்டை இழந்து எதிர் எதிரே மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் இரண்டும் தீபற்றி எரிந்த நிலையில், அயலவர்கள் கூடி தீயினை அணைத்து, பாடுகாயமடைந்த மூவரை நோயாளர் காவு வண்டியை அழைத்து வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பில் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
பிற செய்திகள்
- பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!
- எரிபொருள் கோரி மக்கள் போராட்டம் – மருதானையில் போக்குவரத்து முடக்கம்!
- கோட்ட கோ கம தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டத்தில் குதிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்
- இனவிடுதலையை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” மாபெரும் எழுச்சிப் பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்!
- வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்