• Apr 24 2024

கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மத்தியில் சீனாவில் கொரோனாவுக்கு இரண்டு பேர் பலி!

Tamil nila / Dec 4th 2022, 9:10 pm
image

Advertisement

கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதனால், கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. ஆனால், சீன அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. 


இதனால்,  கட்டுப்பாடுகளில் சிறிதளவு தளர்வுகளை சீனா அறிவித்துள்ள  நிலையில், கொரோனா பாதிப்புக்கு சீனாவில் இரண்டு  பேர் உயிரிழந்துள்ளனர். ஷங்டாங் மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் தலா ஒருவர் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழந்தவர்களின் வயது குறித்த விவரவோ, தடுப்பூசி செலுத்தியிருந்தார்களா, என்ற தெளிவான விவரம் கொடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 


சீனாவில் இன்றைய தினம்  35 ஆயிரத்து 775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 31 ஆயிரத்து 607 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 36 ஆயிரத்து 165 ஆகும். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,235- ஆக உள்ளதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் மேலும் கூறியது.

கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மத்தியில் சீனாவில் கொரோனாவுக்கு இரண்டு பேர் பலி கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதனால், கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. ஆனால், சீன அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதனால்,  கட்டுப்பாடுகளில் சிறிதளவு தளர்வுகளை சீனா அறிவித்துள்ள  நிலையில், கொரோனா பாதிப்புக்கு சீனாவில் இரண்டு  பேர் உயிரிழந்துள்ளனர். ஷங்டாங் மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் தலா ஒருவர் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழந்தவர்களின் வயது குறித்த விவரவோ, தடுப்பூசி செலுத்தியிருந்தார்களா, என்ற தெளிவான விவரம் கொடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சீனாவில் இன்றைய தினம்  35 ஆயிரத்து 775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 31 ஆயிரத்து 607 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 36 ஆயிரத்து 165 ஆகும். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,235- ஆக உள்ளதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் மேலும் கூறியது.

Advertisement

Advertisement

Advertisement