• Sep 30 2024

கார் கவிழ்ந்து விபத்து - ரஷ்ய இளைஞன் உட்பட இருவர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Jul 29th 2023, 6:13 pm
image

Advertisement

ஹுன்னஸ்கிரிய மீமுரே வீதியின் புஸ்ஸே கால்வாய் பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து மெதமஹநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காரில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன், இன்று காலை 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 28 வயதுடைய ரஷ்ய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உடதும்பர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் கவிழ்ந்து விபத்து - ரஷ்ய இளைஞன் உட்பட இருவர் உயிரிழப்பு samugammedia ஹுன்னஸ்கிரிய மீமுரே வீதியின் புஸ்ஸே கால்வாய் பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து மெதமஹநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் காரில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன், இன்று காலை 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் 28 வயதுடைய ரஷ்ய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் உடதும்பர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement