• Apr 19 2024

இலங்கை ஏழை மக்களுக்காக இங்கிலாந்து மாணவர்கள் செய்த நெகிழ்சி செயல் samugammedia

Chithra / Apr 9th 2023, 8:42 am
image

Advertisement

இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தின் ஏழை மக்களுக்கான சுத்தமான கிணறுகளை பராமரித்தல் மற்றும் விவசாயத்துறைக்கு உதவும் வகையில் இங்கிலாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள சொலிஹூல் நகர பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் 58ஆயிரம் பவுண் நிதியை திரட்டியுள்ளனர்.

இந்தநிதியை, இரண்டு தொண்டு நிறுவனங்கள் ஊடாக இலங்கை மக்களுக்கான சுத்தமான கிணறுகள் என்ற திட்டத்துக்கு வழங்கவுள்ளதாக சொலிஹூல் கல்லூரி அறிவித்துள்ளது.


50 கிலோ மீற்றர் மலையேற்றம் உட்பட்ட நடைப்பயணத்தின் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.

கல்லூரியின் தலைவர் மார்க் பென்னி தலைமையிலான குழு கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி இந்த நிதித்திரட்டலில் ஈடுபட்டு ஒரேநாளில் பெருந்தொகை நிதியை சேகரித்துள்ளது.


இதன் மூலம் தூய்மையான கிணறுகளை உருவாக்கவும், விதை பொதிகளை வழங்கவும் மற்றும் நிலையான உற்பத்திக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த செயற்திட்டங்களை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் சொலிஹூல் கல்லூரி அறிவித்துள்ளது.

முன்னரும் பல ஆண்டுகளாக, இலங்கையின் ஏழ்மையான பகுதிகளில் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு சொலிஹூல் கல்லூரி தமது நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஏழை மக்களுக்காக இங்கிலாந்து மாணவர்கள் செய்த நெகிழ்சி செயல் samugammedia இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தின் ஏழை மக்களுக்கான சுத்தமான கிணறுகளை பராமரித்தல் மற்றும் விவசாயத்துறைக்கு உதவும் வகையில் இங்கிலாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள சொலிஹூல் நகர பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் 58ஆயிரம் பவுண் நிதியை திரட்டியுள்ளனர்.இந்தநிதியை, இரண்டு தொண்டு நிறுவனங்கள் ஊடாக இலங்கை மக்களுக்கான சுத்தமான கிணறுகள் என்ற திட்டத்துக்கு வழங்கவுள்ளதாக சொலிஹூல் கல்லூரி அறிவித்துள்ளது.50 கிலோ மீற்றர் மலையேற்றம் உட்பட்ட நடைப்பயணத்தின் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.கல்லூரியின் தலைவர் மார்க் பென்னி தலைமையிலான குழு கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி இந்த நிதித்திரட்டலில் ஈடுபட்டு ஒரேநாளில் பெருந்தொகை நிதியை சேகரித்துள்ளது.இதன் மூலம் தூய்மையான கிணறுகளை உருவாக்கவும், விதை பொதிகளை வழங்கவும் மற்றும் நிலையான உற்பத்திக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.இந்த செயற்திட்டங்களை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் சொலிஹூல் கல்லூரி அறிவித்துள்ளது.முன்னரும் பல ஆண்டுகளாக, இலங்கையின் ஏழ்மையான பகுதிகளில் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு சொலிஹூல் கல்லூரி தமது நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement