Tuesday, June 28, 2022

சோர்வின் விளிம்பில் உக்ரைன் படைகள்!

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் உக்ரைன் நிலப்பரப்பில் 115வது நாளாகவும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் சூழலில், உக்ரைன் தனது பிரதான துறைமுகமான மாரிபோலிலை இழந்த பின்னர் தற்போது மீண்டும் சோர்வினை சந்திக்க தொடங்கியுள்ளதாக போர்க்கள செய்திகள் தெரிவிக்கின்றன.

மாரிபோலின் வீழ்ச்சிக்குப் பின்னர் மூர்க்கத்தனமாக போரிட்டு உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய உக்ரைன் படைகள் தற்போது சோர்வடைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது லூஹான் பிராந்தியத்தில் கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் தொடர்ந்தும் ஆட்லரி குண்டுகளை பொழிந்து வருவதாகவும், உக்ரைன் படைகள் எதிர்த் தாக்குதல்களை மேற்கொள்வதில் இருந்து பின்வாங்குவதாகவும்  இந்த நிலை ரஷ்ய படைகள் மேலும் முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கக் கூடும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஆயுத பற்றாக்குறை காரணமாக உக்ரைன் படைகள் தமது எதிர்தாக்குதல்களை நிறுத்தி வைத்திருக்க கூடும் என்றும் கூறப்படுகின்றது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை