• Apr 18 2024

வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படும் - எச்சரித்த ஐக்கிய நாடுகள் சபை! SamugamMedia

Tamil nila / Mar 22nd 2023, 7:50 pm
image

Advertisement

காலநிலை மாற்றத்தாலும், அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டினாலும் உலக அளவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளன.


வளர்ந்து வரும் நுகர்வு கலாச்சாரம் மனிதனின் அடிப்படைத் தேவையை தாண்டி நிறைய விசயங்களை செய்கிறது.


இதனால் அளவுக்கு அதிகமான தொழிற்சாலைகளும், வாகனங்களும், பூமியின் மீது துளைக்கப்படும் ராட்சச குழாய்களும் பூமி அதிக அளவு வெப்பமடைய காரணமாக இருக்கின்றன.


இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன. நுகர்வு கலாச்சாரம், காலநிலை மாற்றம் மற்றும் அதி தீவிர வளர்ச்சியினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது” என எச்சரித்துள்ளது.


அளவுக்கு அதிகமான மாசுபாடு தொழிற்சாலைகளின் மூலமும், அதிலிருந்து வெளிப்படும் புகையின் மூலமும் உண்டாகிறது.



மேலும் மனிதர்களின் பயன்பாட்டிலுள்ள வாகனங்கள் கூட இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன.  காற்று மாசுப்பாடு புவியில் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, புவி வெப்பமடைதலை அதிகரித்து நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கியுள்ளது.


ஒரு ஆண்டுக்கு 300 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையால் வாழ்கின்றனர் என ஐ.நாவின் ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.


இது பற்றி ஐ.நாவின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கூறியதாவது, “மனித குலத்தின் உயிர் நாடியான நீர் மாசுபாட்டாலும், காலநிலை மாற்றத்தாலும் தண்ணீர் பஞ்சம் உண்டாகிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


காலநிலை மாற்றம் நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ காடுகளில் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.


மனிதர்களும் அதன் தீவிரத்தை கடந்து பத்து ஆண்டுகளாக சந்தித்து வருகின்றனர். உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீர் பயன்பாட்டின் அவசியத்தையும், அதனை எவ்வளவு சிக்கமான செலவழிக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து, முடிந்த அளவு காற்றை மாசுப்படுத்தாமல் இருப்பது அவசியமென்ற விழிப்புணர்வை தரவே ஐ.நா இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படும் - எச்சரித்த ஐக்கிய நாடுகள் சபை SamugamMedia காலநிலை மாற்றத்தாலும், அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டினாலும் உலக அளவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளன.வளர்ந்து வரும் நுகர்வு கலாச்சாரம் மனிதனின் அடிப்படைத் தேவையை தாண்டி நிறைய விசயங்களை செய்கிறது.இதனால் அளவுக்கு அதிகமான தொழிற்சாலைகளும், வாகனங்களும், பூமியின் மீது துளைக்கப்படும் ராட்சச குழாய்களும் பூமி அதிக அளவு வெப்பமடைய காரணமாக இருக்கின்றன.இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன. நுகர்வு கலாச்சாரம், காலநிலை மாற்றம் மற்றும் அதி தீவிர வளர்ச்சியினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது” என எச்சரித்துள்ளது.அளவுக்கு அதிகமான மாசுபாடு தொழிற்சாலைகளின் மூலமும், அதிலிருந்து வெளிப்படும் புகையின் மூலமும் உண்டாகிறது.மேலும் மனிதர்களின் பயன்பாட்டிலுள்ள வாகனங்கள் கூட இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன.  காற்று மாசுப்பாடு புவியில் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, புவி வெப்பமடைதலை அதிகரித்து நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கியுள்ளது.ஒரு ஆண்டுக்கு 300 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையால் வாழ்கின்றனர் என ஐ.நாவின் ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.இது பற்றி ஐ.நாவின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கூறியதாவது, “மனித குலத்தின் உயிர் நாடியான நீர் மாசுபாட்டாலும், காலநிலை மாற்றத்தாலும் தண்ணீர் பஞ்சம் உண்டாகிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றம் நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ காடுகளில் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.மனிதர்களும் அதன் தீவிரத்தை கடந்து பத்து ஆண்டுகளாக சந்தித்து வருகின்றனர். உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீர் பயன்பாட்டின் அவசியத்தையும், அதனை எவ்வளவு சிக்கமான செலவழிக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து, முடிந்த அளவு காற்றை மாசுப்படுத்தாமல் இருப்பது அவசியமென்ற விழிப்புணர்வை தரவே ஐ.நா இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement