திருகோணமலையில் அவரசமாக முடக்கப்பட்ட பிரதேசம்!

344

திருகோணமலையில் சடுதியாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருகோணமலை, உப்புவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று, பூம்புகார் கிழக்கு பிரதேசம் இன்று சனிக்கிழமை முதல் முடக்கப்பட்டுள்ளது.

பூம்புகார் கிழக்கு பிரதேசத்தில் நேற்று மட்டும் 13 புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

அதன் காரணமாக, குறித்த பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பூம்புகார் கிழக்கு பிரதேசத்திற்கு உள் நுழையும் மூன்று வீதிகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களில் பூம்புகார் கிழக்கு பிரதேசத்தில் 20 கொவிட் – 19 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த பிரதேசம் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 14ம் திகதி திருகோணமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: