நிதி நிர்வாகத்திற்கான தொழில்நுட்ப உதவியை வழங்க அமெரிக்கா இணக்கம்

இலங்கையில் நிதி முகாமைத்துவத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் கெல்லி கெய்டர்லிங் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜதந்திர குழுவும் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அமெரிக்காவிற்கான ஆசிய திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் டுவிட்டர் பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார்.

இதில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவும், இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் சமூகங்களுக்கு நேரடியாக மில்லியன் கணக்கான டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கான அமெரிக்க முயற்சிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை