நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டமும் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் பலஅரசியற் குழப்ப நிலைக்கு மத்தியில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜனாமா செய்ததுடன் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளும் தமது வாழ்த்துக்களை ரணிலுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் இன்றையதினம் கொழும்பிலுள்ள ஜேவிபி தலைமை அலுவலகத்தில் ஜே.வி.பியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்கவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.