விவசாய சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்: விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கோரிக்கை

94

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் காணப்படும் இலங்கை விவசாய சேவை உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் (தரம் 1, தரம்2, தரம்3) விரைவில் நிரப்பப்படவுள்ளன.

வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துல சேனா இதற்கான துரித நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திpல் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் அடிப்படையில் இலங்கை விவசாய சேவை உத்தியோகஸ்தர்கள் தரம் 3இல் 14 வெற்றிடங்களும், தரம் 2இல் 5 வெற்றிடங்களும், தரம் 1இல் ஒரு வெற்றிடமுமாக மொத்தம் 20 வெற்றிடங்கள் நிரப்படவுள்ளன.

விண்ணப்பதாரர்கள் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 07.02.2022 இற்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் கோரியுள்ளார்.

மேற்படி வெற்றிடங்கள் நேர்முக பரீட்சை புள்ளியடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்படவுள்ளனர்.