ஸ்டாலினையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய வனிதா!

326

திமுக வெற்றி பெற்றதால் வனிதா என்ற பெண் நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்தியுள்ள சம்பவம் ஸ்ராலினுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக். இவரது மனைவி வனிதா(வயது 32). தி.மு.க. தொண்டரான இவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானால் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்துவதாக பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் வேண்டுதலை மேற்கொண்டுள்ளார்.

இந்தசூழலில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்க இருப்பதால், வனிதா தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று காலை முத்தாலம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால் கோவில் பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தனது காணிக்கையை செலுத்த வேண்டும் என்பதற்காக வனிதா திடீரென கத்தியால் நாக்கை அறுத்து கோவில் படியில் வைத்துள்ளார். ரத்தம் கொட்டியதால் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே வனிதா மயங்கி விழுந்த நிலையில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வனிதாவை தூக்கினர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக வெற்றிக்காக வனிதா என்ற சகோதரி தன் நாக்கை இழந்தார் என்பதை அறிந்து வருந்தமடைகிறேன், இதுபோன்ற துயரங்களை ஏற்படுத்தாமல், ஏழை – எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை காணிக்கையாக செலுத்துங்கள் என்று திராவிட முன்னேற்ற கழகம் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: