தெரு நாய்களுக்காக 2 டொன் உணவுப் பொருட்களை வழங்கினார் வரலக்ஷ்மி சரத்குமார்

250

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டொன் உணவுப் பொருட்களை தமிழக அரசுக்கு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

போடா போடி திரைப்படத்தின் மூலம் கொலிவூட்டில் அறிமுகமான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் எதிர்மறை கதாப்பாத்திரங்களிலும் துணிச்சலாக நடிப்பதால், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்துவருகின்றன.

தற்போது வரலக்ஷ்மியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது.

இவர் சேவ் சக்தி எனும் அமைப்பு மூலம் சமூக நலப் பணிகளையும் செய்து வருகிறார்.

தற்போது இந்த அமைப்பு மூலம், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருள்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார்.

இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விபரத்தை நடிகரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ‘கோவிட் உதவி எண்களையும்’ வரலக்ஷ்மி சரத்குமார் உருவாக்கியுள்ளார்.

இந்த சேவையையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: