• Mar 29 2024

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு குரல் கொடுத்த வசந்த முதலிகே! SamugamMedia

Tamil nila / Mar 25th 2023, 10:44 pm
image

Advertisement

பயங்கரவாத தடைச்சட்டத்தினை  பயன்படுத்தி பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும்  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவரும் வசந்த முதலிகே தெரிவித்தார்.


அத்துடன், இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் தற்பொழுதும் வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றார்கள் என்றும் வசந்த முதலிகே தெரிவித்தார்.


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக  நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பாக பொதுக்கருத்தரங்கு இன்று (25) யாழில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்தமுதலிகே தலைமையில் நடைபெற்றது.


இதன்போது கருத்துதெரிவிக்கையிலேயே வசந்த முதலிகே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 


கடந்த காலத்தில் மக்கள் அணிவகுப்பில் நின்றதை அவதானித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டம், என்ற விடயத்திற்கு துணைநின்ற எங்களுக்கு அரசின் மூலம் அறிவிக்கப்பட்டது பயங்கரவாதம் என்றனர்.


டிலான் அலெஸ், ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவின் ஒன்று சேர்ந்து பொய்யான சாட்சிகளை உருவாக்கி தடுத்துவைத்து விசாரணை செய்யும் நோக்கில் அவர்கள் இரண்டு வருடங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு உள்ளாக்கினர்.


1979 ஆவது ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதச்சட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரையான காலம் வரை 100க்கு மேற்பட்டவர்கள் இன்னும் தடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது அரசாங்க புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் அதில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர்.


அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர். இப்போது பொஸிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மூலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நிலைநாட்டமுடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு குரல் கொடுத்த வசந்த முதலிகே SamugamMedia பயங்கரவாத தடைச்சட்டத்தினை  பயன்படுத்தி பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும்  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவரும் வசந்த முதலிகே தெரிவித்தார்.அத்துடன், இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் தற்பொழுதும் வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றார்கள் என்றும் வசந்த முதலிகே தெரிவித்தார்.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக  நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பாக பொதுக்கருத்தரங்கு இன்று (25) யாழில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்தமுதலிகே தலைமையில் நடைபெற்றது.இதன்போது கருத்துதெரிவிக்கையிலேயே வசந்த முதலிகே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் மக்கள் அணிவகுப்பில் நின்றதை அவதானித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டம், என்ற விடயத்திற்கு துணைநின்ற எங்களுக்கு அரசின் மூலம் அறிவிக்கப்பட்டது பயங்கரவாதம் என்றனர்.டிலான் அலெஸ், ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவின் ஒன்று சேர்ந்து பொய்யான சாட்சிகளை உருவாக்கி தடுத்துவைத்து விசாரணை செய்யும் நோக்கில் அவர்கள் இரண்டு வருடங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு உள்ளாக்கினர்.1979 ஆவது ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதச்சட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரையான காலம் வரை 100க்கு மேற்பட்டவர்கள் இன்னும் தடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது அரசாங்க புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் அதில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர்.அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர். இப்போது பொஸிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மூலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நிலைநாட்டமுடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement