யானையை கண்ட தடுமாற்றத்தில் வாகன விபத்து! இருவர் படுகாயம்

104

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி நாவலடி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனமொன்று தடம் புரண்டு, இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையில் இருந்து பொலநறுவை கதுருவெல பகுதியை நோக்கி பயணித்த எல்ப் ரக வாகனம் ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் வீதியை குறுக்கறுத்த யானையை கண்ட தடுமாற்றத்தில் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தில் பயணித்த பொலநறுவை – கதுறுவெல முஸ்லீம் கொலனி பிரதேசத்தை சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடைய நபர்கள் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரனைளகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான்! ஜீவன் தொண்டமான்