நாளை துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று பிரதமரை சந்தித்த மம்தா பானர்ஜி!

நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது,ஏற்கனவே நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் நாளை நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்திலும் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை