Wednesday, May 18, 2022

ரணிலுக்கு விக்கியும் ஆதரவு!

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பல தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.

‘எமது கட்சியில் நான் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன். இந்நிலையில் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளேன்’ – என்று விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான விக்னேஸ்வரன் எம்.பி. ரணில் அரசின் அமைச்சரவையில் இடம்பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை