பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவில் நிவாரணம் வழங்கிவைத்தார் விக்கி எம்பி

61

கொரோனா தொற்றின் 3 ஆம் அலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் போன்றவை, புலம்பெயர் சமூகத்தின் நிதி உதவியுடன் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலின் 3 ஆம் அலையினால் பாதிக்கப்பட்டு, மிகுந்த சிரமத்தின் கீழ் மக்கள் அவதிப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, ரூபா. 1மில்லியன் பெறுமதியான பணத்தொகையை அவசர நிதி உதவித் தொகையாக புலம்பெயர் சமூகத்தினர் அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த உதவி தொகையில் இருந்து சுமார் 450 தொடக்கம் 500 வரையான உணவுப் பொதிகள் பொதி செய்யப்பட்டு பல்வேறு இடங்களிலும் உணவுக்காக சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்கள், அவ் பிரதேச கிராம சேவகர் உத்தியோகத்தரால் சிபார்சு செய்யப்பட்ட குடும்பங்கள்,
காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் , மற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள் என பலதரப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுகின்றது.

உதவிகளை தொடர்ந்து வழங்குவதுடன் சுய முயற்சி உற்பத்திகளை (சிறியளவிலான) ஊக்குவிக்கும் முகமாக இந்த நிவாரணப் பொருட்களுடன் சேர்த்து வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைப்பதற்கான விதைகள் மற்றும் அறிவுத்தல் கடிதங்கள் இணைத்து அனுப்பப்படுகின்றது.

அதே போல தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, சேதன உரம் தயாரித்தல் போன்ற விடயங்களில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான தேனீ வளர்ப்புப் பெட்டிகளை இலவசமாக வழங்கவிருப்பதுடன் அவர்களுக்கான பயிற்சிகளையும் விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து வழங்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: