துப்பாக்கி முனையில் குழந்தையை கடத்தும் விஜய் சேதுபதி!வேற லெவலில் மிரட்டும் கெட்டப்..!

81

தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவின் ஆரம்பகால கட்டத்தில் தனக்கு கிடைத்த எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த விஜய் சேதுபதி, தற்போது கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்தநிலையில், நடிகர் விஜய் சேதுபதி மும்பைக்கார் படத்தில் நடிக்கும் கெட்டப் வெளியாகியுள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என்றும் பல மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

மும்பைக்கார் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.

இந்தப் படம் தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ரிமேக் ஆகும்.

தற்போது, இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி தனது கெட்டப்பை டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் சேதுபதி ஷேர் செய்துள்ள போட்டோவில் சிறு பையன் ஒருவரை துப்பாக்கி முனையில் வாயை கட்டி கடத்துவதாக காணப்படுகிறது.

குறித்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: