• Apr 19 2024

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக இருப்பவர்கள் யார் என்பதை விஜயதாச வெளிப்படுத்த வேண்டும்!

Sharmi / Jan 30th 2023, 5:26 pm
image

Advertisement

தேசிய பொங்கல் தினத்திற்கெதிராக யாழப்பாணத்தில் முன்னெடுதத போராட்டத்தின் எதிரொலியில் கடந்த 18ம் திகதி வேலன் சுவாமிகளை கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாக்கி பிணையில் விடுவித்தனர். இந்த வழக்கு நாளை மன்றுக்கு வர உள்ளது. அந்த வகையில் நான் அவருக்கு மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட ஆலோசனை வழங்கினேன் என சட்டத்தரணி தவராசா தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
வேலன் சுவாமிக்கெதிராக 7 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரைக் கைது செய்தனர். அந்த வழக்கு நாளை நீதிமன்றுக்கு வரவுள்ளது. வழக்கு முடிந்த பின் இது பற்றிய விடயங்களை நான் தமிழ் மக்களுக்கு வெளியிட தயாராகவுள்ளேன்

தற்பொழுது என்னுடைய கணிப்பின் படி 31 கைதிகள் சிறையிலுள்ளனர். இவர்களில் 14 கைதிகள் அனைத்து வழக்குகளும் முடிவடைந்தது.

அண்மையில் வெளியான நீதியமைச்சர் விஜயதாசவின் அறிக்கையில் பல விடயங்களை மறைக்க முற்பட்டார்.

இங்கு அரசியல்வாதியால் நேரடியாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாது. சட்டத்தரணிகளால் மாத்திரமே முன்னிலையாக முடியும். ஆகவே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யாரென அவர் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விரும்பாதவர்கள் தமிழ்க் கட்சிகளில் இல்லை. கூட்டமைப்பிலிருந்து ரெலோவும், புளொட்டும் தனியாகப் பிரிந்து செல்லவில்லை. தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுவதாக முடிவெடுத்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் கலந்தாலோசித்த பின்னரே அம் முடிவு எட்டப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு கட்சி கூட்டமைப்பாக முடியாது. ஆகவே கூட்டமைப்பிலிருந்து பிரி்ந்து சென்றார்கள் என கூறுவது மக்களை திசைதிருப்ப முன்னெடுக்கும் செயற்பாடாகும். இதேவேளை தமிழரசுக் கட்சியிலிருந்து எவரும் பிரிந்து சென்று ஜனநாயகத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது தொடர்பில் வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாகும்.

ஏற்கனவே கூறப்பட்ட தனியாக போட்டியிடுவோம் பின்னர் இணைந்து ஆட்சியமைப்போம் என்ற கருத்து தமிழரசுக் கட்சி தலைவராலும் முன்வைக்கப்பட்டது. தமிழரசு தனியாகப் போட்டியிட்டாலும் ரெலோ மற்றும் புளொட் ஏனைய மூன்று கட்சிகளுடன் இணைந்து கூட்டமைப்பாகவே போட்டியிடுகின்றது.

நேற்று சுமந்திரன் கூறிய தலையாட்டுதல்  காட்டிக் கொடுத்தல் இ தூள் விற்றல் போன்றவற்றில்  யாரைக் குறிப்பிட்டார் என புரியவில்லை. ஒரு மனிதனைப் பொறுத்தவரை ஒரு ஊடகங்களுக்கு இடமளிக்காது கருத்தை வெளிப்படையாகக் கூற வேண்டும். நானெனின் வெளிப்படையாகவே கூறுவேன் இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு மாறி மாறி தனி மனிதனை விமர்சிக்கும் போது எதிர்காலத்தில் எவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்ற கேள்வி நிலவுகிறது. இது ஒரு அற்ப தேர்தல் அதற்காக இவ்வாறு விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன். இங்கு தலைமைக்கான போட்டியே நிலவுகின்றது. இதற்காகவே இலட்சக்கணக்கான இளைஞர்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.

உங்களால் முடியாவிட்டால் இளம்  சந்ததிக்காக இடமளித்து வாய்ப்பளியுங்கள். என்னைப் பொறுத்தவரை சுமந்திரன் எதற்காக கட்சிக்குள்ளே வந்தாரோ அந்தப் பணியை கச்சிதமாக செய்து முடித்து விட்டார் என தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக இருப்பவர்கள் யார் என்பதை விஜயதாச வெளிப்படுத்த வேண்டும் தேசிய பொங்கல் தினத்திற்கெதிராக யாழப்பாணத்தில் முன்னெடுதத போராட்டத்தின் எதிரொலியில் கடந்த 18ம் திகதி வேலன் சுவாமிகளை கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாக்கி பிணையில் விடுவித்தனர். இந்த வழக்கு நாளை மன்றுக்கு வர உள்ளது. அந்த வகையில் நான் அவருக்கு மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட ஆலோசனை வழங்கினேன் என சட்டத்தரணி தவராசா தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், வேலன் சுவாமிக்கெதிராக 7 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரைக் கைது செய்தனர். அந்த வழக்கு நாளை நீதிமன்றுக்கு வரவுள்ளது. வழக்கு முடிந்த பின் இது பற்றிய விடயங்களை நான் தமிழ் மக்களுக்கு வெளியிட தயாராகவுள்ளேன்தற்பொழுது என்னுடைய கணிப்பின் படி 31 கைதிகள் சிறையிலுள்ளனர். இவர்களில் 14 கைதிகள் அனைத்து வழக்குகளும் முடிவடைந்தது.அண்மையில் வெளியான நீதியமைச்சர் விஜயதாசவின் அறிக்கையில் பல விடயங்களை மறைக்க முற்பட்டார்.இங்கு அரசியல்வாதியால் நேரடியாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாது. சட்டத்தரணிகளால் மாத்திரமே முன்னிலையாக முடியும். ஆகவே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யாரென அவர் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விரும்பாதவர்கள் தமிழ்க் கட்சிகளில் இல்லை. கூட்டமைப்பிலிருந்து ரெலோவும், புளொட்டும் தனியாகப் பிரிந்து செல்லவில்லை. தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுவதாக முடிவெடுத்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் கலந்தாலோசித்த பின்னரே அம் முடிவு எட்டப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு கட்சி கூட்டமைப்பாக முடியாது. ஆகவே கூட்டமைப்பிலிருந்து பிரி்ந்து சென்றார்கள் என கூறுவது மக்களை திசைதிருப்ப முன்னெடுக்கும் செயற்பாடாகும். இதேவேளை தமிழரசுக் கட்சியிலிருந்து எவரும் பிரிந்து சென்று ஜனநாயகத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது தொடர்பில் வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாகும்.ஏற்கனவே கூறப்பட்ட தனியாக போட்டியிடுவோம் பின்னர் இணைந்து ஆட்சியமைப்போம் என்ற கருத்து தமிழரசுக் கட்சி தலைவராலும் முன்வைக்கப்பட்டது. தமிழரசு தனியாகப் போட்டியிட்டாலும் ரெலோ மற்றும் புளொட் ஏனைய மூன்று கட்சிகளுடன் இணைந்து கூட்டமைப்பாகவே போட்டியிடுகின்றது. நேற்று சுமந்திரன் கூறிய தலையாட்டுதல்  காட்டிக் கொடுத்தல் இ தூள் விற்றல் போன்றவற்றில்  யாரைக் குறிப்பிட்டார் என புரியவில்லை. ஒரு மனிதனைப் பொறுத்தவரை ஒரு ஊடகங்களுக்கு இடமளிக்காது கருத்தை வெளிப்படையாகக் கூற வேண்டும். நானெனின் வெளிப்படையாகவே கூறுவேன் இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு மாறி மாறி தனி மனிதனை விமர்சிக்கும் போது எதிர்காலத்தில் எவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்ற கேள்வி நிலவுகிறது. இது ஒரு அற்ப தேர்தல் அதற்காக இவ்வாறு விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன். இங்கு தலைமைக்கான போட்டியே நிலவுகின்றது. இதற்காகவே இலட்சக்கணக்கான இளைஞர்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.உங்களால் முடியாவிட்டால் இளம்  சந்ததிக்காக இடமளித்து வாய்ப்பளியுங்கள். என்னைப் பொறுத்தவரை சுமந்திரன் எதற்காக கட்சிக்குள்ளே வந்தாரோ அந்தப் பணியை கச்சிதமாக செய்து முடித்து விட்டார் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement