மெக்சிகோவில் தொடரும் வன்முறை: பொலிஸார் பதில் தாக்குதல்

மெக்சிகோவில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் கடத்தல் மற்றும் வன்முறை சம்பவங்கள் என்பன அதிகரித்த நிலையில் காணப்பட்டு வருவதாகவும், இளம் ஆண்களும், பெண்களும் போதைப் பொருள்களை பாவித்து விட்டு பொதுமக்களுடன் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கண் மூடித்தனமான கொலைகளையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஆயுதத்தை கையில் எடுத்த காவல் துறையினர் வன்முறை மற்றும் போதைப் பொருள் குழுக்களைத் தேடி வலை வீசி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட திடீர் துப்பாக்கி பிரயோகத்திற்கு பதில் தாக்குதல் மேற்கொண்டதில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 10 ஆண்களும், 3 பெண்களும் அடங்குவதாகவும் மேலும் அவர்களிடமிருந்து பல வகையான போதைப் பொருட்கள் மற்றும் கைத்துப்பாக்கிகள், வாள்கள் உட்பட பல ஆயுதங்களையும் மீட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடுவதற்கான அனுமதியை மெக்சிகோ அரசு காவல் துறையினருக்கு தற்பொழுது வழங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை