தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குலுமணாலியில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் படத்தில் லெஜண்ட் சரவணன் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்து வருகிறார்.

மேலும் விவேக் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்போது இணையதளங்களில், குலுமணாலியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 80 சதவீதம் முடிவு பெற்று விட்டதாகவும் மீதி உள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: