இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் விராட் கோலி!

154

இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி உடனடியாக பதவி விலகுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

33 வயதுடைய விராட் கோலி சமீபத்தில் ஒருநாள் மற்றும் T20 தலைமைத்துவத்தில் இருந்து பதவி விலகியிருந்தார்.

இது இவ்வாறு இருக்க இன்றைய தினம் டெஸ்ட் தலைமைத்துவத்தில் இருந்தும் விலகிக்கொள்வதாக தனது சமூக வலைதளத்தின் ஊடாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

7 ஆண்டுகளாக அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முழு முயற்சியையும் கடினமான உழைப்பையும் வழங்கியிருந்தேன்.

அத்தோடு இந்த பயணத்தை மறக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.