• Sep 30 2024

அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் விசா கட்டணங்கள் – வெளியான முழு விபரம்! samugammedia

Tamil nila / Sep 29th 2023, 3:11 pm
image

Advertisement

பிரித்தானியாவில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான விசா வகைகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். இந்த விசா கட்டண உயர்வு அக்டோபர் 4 முதல் அமலுக்கு வரும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு வெளியே இருந்து மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டுகளாகவும், சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும், முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் விசா கட்டணங்கள் – வெளியான முழு விபரம் samugammedia பிரித்தானியாவில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.பெரும்பாலான விசா வகைகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். இந்த விசா கட்டண உயர்வு அக்டோபர் 4 முதல் அமலுக்கு வரும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ,புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு வெளியே இருந்து மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டுகளாகவும், சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.குறிப்பாக பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும், முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement