ஆறாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெடித்து சிதறிய எரிமலை-காணொளி இணைப்பு!

357

ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை வெளியேற்றிய நெருப்புக் குழம்பின் புதிய வீடியோ வெளியாகி உள்ளது.

அந்நாட்டில் உள்ள ஃபக்ராடல்ஸ்பஜால் (Fagradalsfjall) என்று பெயரிடப்பட்ட எரிமலை கடந்த 6,000 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெடித்துச் சிதறியுள்ளது.

ஆயிரக்கணக்கான நில அதிர்வுகளுடன் வெடித்துள்ள எரிமலையிலிருந்து லாவா எனப்படும் நெருப்புக் குழம்புகள் ஆறாக ஓடி வருகின்றன.

தற்போது இந்தக் காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்துள்ளார்.

இரவு பகல் என எந்நேரமும் நெருப்புக் குழம்பை வெளியேற்றும் ஃபக்ராடல்ஸ்பஜால் எரிமலையைக் காண ஏராளமான மக்கள் வந்து செல்வதால் அப்பகுதி சுற்றுலா தலமாக மாறி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: