வீட்டில் பயன்படுத்தும் பல்வேறு விதமான பொருட்களும் இப்போது கைக்கு அடக்கமாக சிறிய அளவில் கிடைக்கிறது.
அந்த வகையில் வீட்டில் பயன்படுத்தக்கூடிய சிறிய லைற் ஒன்றை ரியல்மீ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மோஷன் டிரெக் லைற் என்று சொல்லப்படும் இந்த உபகரணம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கைக்கு அடக்கமாக உள்ள இந்த லைற்க்கு மூன்று பற்றிகள் ( Battery ) தேவைப்படுகிறது.இந்த பற்றி ஒரு வருடம் வரைக்கும் பயன்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது.
வீட்டில் உள்ள லைற்களை ஒப் செய்த பின்னர்,யாரும் நடமாடுவது மற்றும் அசைவது தெரிந்தால் பிரகாசமான ஒளியை வெளிவிடும்.
குறிப்பாக யாராவது நடந்து சென்றால் லைற் பிரகாசமாக எரியும்.வட்ட வடிவில் உள்ள இந்த லைற்க்கு பின்பக்கமாக காந்தம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுவர் மற்றும் ஏனைய இடங்களில் பொருத்துவதற்கு ,ஈசியாக பசை போன்ற ஸ்ராண்ட் வழங்கப்பட்டுள்ளது.இதனால் சுவரில் இலகுவாக ஒட்டிக்கொள்ள முடியும்.