நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் எச்சரிக்கை

204

திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் பிற நிகழ்வுகள், இன்று (24) முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறினால், அதற்காக நிகழ்வு அமைப்பாளர்கள் மற்றும் நிகழ்வு மண்டப உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மீறினால் 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.

மண்டபத்தில் 25 சதவீதத்திற்கு அதிகமாக கூட்டம் இருக்கக்கூடாது என்ற விதிமுறைக்கினங்கவே திருமணங்களையும் பிற செயல்பாடுகளையும் நடத்த நாங்கள் அனுமதி அளித்தோம்.

இருப்பினும், சுகாதார ஆலோசனையை மீறி பல திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களுடன் அறிக்கைகள் உள்ளன.

அத்தகைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: