ரிஷாட்டை காட்டிக் கொடுத்தது சிம் அட்டையா? 10 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரனை..!

295

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் 6 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது பிறிதொரு நபரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டை மற்றும் புதிய கையடக்கத் தொலைபேசி என ரிஷாட் பயன்படுத்தியிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இதுதவிர, கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை முதல் வியாழக்கிழமை வரை களுபோவில வைத்தியசாலை அருகே அவர் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த மருத்துவர் உள்ளிட்ட 7 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டள நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.சுமார் 2 மணி நேர விசாரனையின் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

மேலும் உறவினர் ஒருவரின் பெயரிலான சிம் அட்டையை அவர் பயன்படுத்துகின்றார் என்பதை விசாரணைகளின் போது அறிந்துகொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர், அந்த இலக்கம் எங்கிருந்து பயன்படுத்தப்படுகின்றது என்பதைக் கண்டறிந்த நிலையிலேயே ரிஷாட் மறைந்திருந்த வீட்டை நெருங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு நூற்றுக்கணக்கான பொலிஸார் அதிகாலை 3.00 மணியளவில் குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத்த போது ரிஷாட் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ரிஷாட் மீது குற்றப்புலனாய்வு பொலிசார் 10 குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளனர்.இது தொடர்பாக விசாரனைகள் நடத்தப்படுகின்றது.இந்தக் குற்றச்சாட்டு அடங்கிய அறிக்கை எதிர்வரும் 27 ஆ ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.